Site Overlay

Malai Kofta in Tamil / Kofta Recipes / Goki’s Kitchen

கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :

1. வெண்ணை – 3 ஸ்பூன்
2. சீரகம் – 1/2 ஸ்பூன்
3. பட்டை – 1
4. கிராம்பு – 3
5. மிளகு – 15
6. வெங்காயம் – 2
7. பச்சை மிளகாய் – 2
8. இஞ்சி – 1 இன்ச்
9. பூண்டு – 4
10. முந்திரி – 20
11. தக்காளி – 4
12. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
13. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1&1/2 ஸ்பூன்
14. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
15. கரம் மசாலா – 1 ஸ்பூன்
16. சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
17. கொத்தமல்லிதூள் -1 ஸ்பூன்
18. உப்பு தேவையான அளவு

கோப்தா செய்ய தேவையான பொருட்கள் :

1. உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) – 200 கிராம்
2. பன்னீர் – (துருவியது) – 200 கிராம்
3. முந்திரி – 10
4. கொத்தமல்லி தழை சிறிதளவு
5. மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன்
6. சோளமாவு – 1 ஸ்பூன்
7. உப்பு தேவையான அளவு
8. சோளமாவு சிறிதளவு (for dipping)
9. எண்ணெய் தேவையான அளவு

பன்னீர் கோப்தா / Malai Kofta / Kofta Recipes / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:
கிரேவி செய்ய:

Step – 1:
ஒரு வாணலியில் வெண்ணை – 3 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பட்டை – 1, கிராம்பு – 3, மிளகு – 15 கலந்துகொள்ளவும்.

  

Step – 2:
பின் வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 4 பல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

Step – 3:
முந்திரி – 20, தக்காளி -4, மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1&1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், கொத்தமல்லிதூள் -1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு சேர்த்து 
5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி பின் அடுப்பை அனைத்து ஆறவிடவும்.

 

Step – 4:
பின் மிஸ்சிஜரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

Step – 5:
அதே வாணலியில் வெண்ணை – 2 ஸ்பூன் சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட் சேர்க்கவும்.

Step – 6:
சிறிதளவு தண்ணீர் சேர்த்து  நன்கு கலந்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வைக்கவும்.

 

Step – 7:
5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து கிரேவியை தனியே வைக்கவும். நம்முடைய கிரேவி தயார்.

கோப்தா செய்ய:
செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) – 200 கிராம், பன்னீர் – (துருவியது) – 200 கிராம்
முந்திரி – 10, கொத்தமல்லி தழை சிறிதளவு, மிளகாய்த்தூள் – 1/4 ஸ்பூன், சோளமாவு – 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

      

Step – 2:
கலந்ததும் சிறுசிறு உருண்டையாக செய்து தனியே வைக்கவும்.

   

Step – 3:
சோளமாவு சிறிதளவு ஒரு பாத்திரத்தில் எடுத்து தயார் செய்த உருண்டையை அதில் நன்கு உருட்டி எண்ணையில் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு மொன்னிறமாக வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.

 

Step – 4:
நாம் தயார் செய்த கிரேவியில் பொரித்த உருண்டையை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Step – 5:
நம்முடைய சுவையான பன்னீர் கோப்தா தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/malai-kofta-kofta-recipes-gokis-kitchen/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *