Site Overlay

Tomato Coconut Chutney Recipe in Tamil / Chutney Recipe / Goki’s Kitchen

சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

1. எண்ணெய் – 4 ஸ்பூன்
2. பூண்டு – 3
3. தக்காளி – 2 (பெரியது)
4. மிளகாய்வத்தல் – 5
5. தேங்காய் – அரை மூடி

தாளிக்க தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 2 ஸ்பூன்
2. கருவேப்பிலை சிறிதளவு
3. உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
4. கடுகு – 1/4 ஸ்பூன்
5. சீரகம் – 1/4 ஸ்பூன்

Tomato Coconut Chutney Recipe in Tamil / Chutney Recipe / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

சட்னி செய்ய:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன், பூண்டு – 3, தக்காளி – 2 (பெரியது), மிளகாய்வத்தல் – 5,
தேங்காய் – அரை மூடி சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

Step – 2:
ஆறிய பின் மிஸ்சிஜரில் சேர்த்து தேவையான அளவு உப்பு பொட்டு கடலை – 1 ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தாளிக்க

Step – 1:
எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/4 ஸ்பூன் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.

Step – 2:
நம்முடைய சுவையான தக்காளி தேங்காய் சட்னி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/tomato-coconut-chutney-chutney-recipe-gokis-kitchen/