Site Overlay

உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி / Goki’s Kitchen

 

செய்ய தேவையான பொருட்கள்:
பிரியாணி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

1. பாசுமதி அரிசி – 3 & 1/2 டம்ளர்
2. பிரியாணி இலை – 2
3. பட்டை – 1
4. கருப்பு ஏலக்காய் – 1
5. நட்சத்திர சோம்பு – 1
6. பச்சை ஏலக்காய் – 3
7. கிராம்பு – 5
8. சாஹி ஜீரா – 1/2 ஸ்பூன்
9. உப்பு தேவையான அளவு
10. எண்ணெய் – 1 ஸ்பூன்

உருளைக்கிழங்கு 65 செய்ய தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
2. சோள மாவு – 5 ஸ்பூன்
3. மைதா மாவு – 5 ஸ்பூன்
4. பெருங்காயம் கொஞ்சம்
5. உப்பு தேவையான அளவு
6. காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
7. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
8. மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
9. தண்ணீர் தேவையான அளவு (மாவு பிசைய)
10. எண்ணெய் தேவையான அளவு (உருளைக்கிழங்கு பொறிக்க)

பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

1. நெய் -4 ஸ்பூன்
2. எண்ணெய் – 4 ஸ்பூன்
3. வெங்காயம் – 3
4. பிரியாணி இலை – 3
5. பட்டை
6. ஜாவிதிரி – 1
7. மராத்தி மொக்கு – 1
8. கருப்பு ஏலக்காய் -1
9. நட்சத்திர சோம்பு – 2
10. பச்சை ஏலக்காய் – 4
11. கிராம்பு – 4
12. கல்பாசி சிறிதளவு
13. சாஹி ஜீரா – 1 ஸ்பூன்
14. ஜாதிக்காய் பொடி – (சிறிதளவு மட்டும்)
15. சோம்பு – 1/2 ஸ்பூன்
16. தக்காளி – 3
17. பூண்டு – 10 பல்
18. பச்சை மிளகாய் – 3
19. உப்பு தேவையான அளவு
20. தயிர் – 8 ஸ்பூன்
21. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
22. கோஹினூர் பிரியாணி மசாலா (16கி) – 2 பாக்கெட்
23. மல்லி இலை, புதினா இலை சிறிதளவு

தம் செய்ய தேவையான பொருட்கள்:

1. வறுத்த வெங்காயம் சிறிதளவு
2. புதினா இலை, மல்லி இலை சிறிதளவு
3. மஞ்சள் பால் அல்லது குங்குமப்பூ பால்

உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி செய்முறை:

Aloo 65 Dum Biryani | உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
பிரியாணி சாதம் செய்ய:
Step – 1:
பிரியாணி சாதம் செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்ததும் 1/2 மணி நேரம் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும்.

Step – 2:
பிரியாணி இலை – 2, பட்டை – 1, கருப்பு ஏலக்காய் – 1, நட்சத்திர சோம்பு – 1, பச்சை ஏலக்காய் – 3, கிராம்பு – 5, சாஹி ஜீரா – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் – 1 ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
   

Step – 3:
சாதத்தை 80% வேகவைக்கவும்.

Step – 4:
சாதம் 80% வெந்ததும் அதை வடிகட்டி தனியே வைக்கவும். பிரியாணி சாதம் தயார்.

உருளைக்கிழங்கு 65 செய்முறை விளக்கம்:
Step – 1:
உருளைக்கிழங்கு வேக வைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானதும் 1/2 கிலோ உருளைக்கிழங்கு சேர்த்து 50% வேகவைக்கவும்.
 

Step – 2:
50% வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.

Step – 3:
கொஞ்சம் பெரிதாக இருக்கும் உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக வெட்டவும்.

Step – 4:
பின் உருளைக்கிழங்கில் சோள மாவு – 5 ஸ்பூன், மைதா மாவு – 5 ஸ்பூன், பெருங்காயம் கொஞ்சம், உப்பு தேவையான அளவு, காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 

Step – 5:
தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.

Step – 6:
பின் சூடான எண்ணையில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.உருளைக்கிழங்கு 65 தயார்.

பிரியாணி மசாலா செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் நெய் -4 ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன் சேர்த்து
வெங்காயம் – 3 சேர்த்து நன்கு வறுத்து அதில் பாதியை ஒரு தட்டில் எடுத்து தனியே வைக்கவும்.


Step – 2:
பின் பிரியாணி இலை – 3, பட்டை, ஜாவிதிரி – 1, மராத்தி மொக்கு – 1, கருப்பு ஏலக்காய் -1, நட்சத்திர சோம்பு – 2, பச்சை ஏலக்காய் – 4, கிராம்பு – 4, கல்பாசி சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.

Step – 3:
சாஹி ஜீரா – 1 ஸ்பூன், ஜாதிக்காய் பொடி – (சிறிதளவு மட்டும்), சோம்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்துவிடவும்.


Step – 4:
தக்காளி – 3, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 3,உப்பு தேவையான அளவு சேர்த்து தக்காளி நன்கு மாசியும் அளவு வதக்கவும்.

Step – 5:
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் – 8 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.


Step – 6:
மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கோஹினூர் பிரியாணி மசாலா (16கி) – 2 பாக்கெட் சேர்த்து நன்கு வதக்கவும்.

Step – 7:
பின் வறுத்த உருளைக்கிழங்கு 65 சேர்த்து நன்கு கலந்துவிட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து மூடி போட்டு சமைக்கவும்.

Step – 8:
கடைசியாக சிறிதளவு மல்லி இலை, புதினா இலை சேர்த்து நன்கு கலந்து பின் ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும். பிரியாணி மசாலா தயார்.


தம் செய்யும் முறை:
Step – 1:
முதலில் தயார் செய்த பிரியாணி மசாலாவை வைக்கவும்.

Step – 2:
வேகவைத்த பிரியாணி சாதம் சேர்க்கவும்.

Step – 3:
வறுத்து தனியே எடுத்துவைத்த வெங்காயம் சேர்க்கவும்.

Step – 4:
சிறிதளவு மல்லியிலை புதினாயிலை சேர்க்கவும்.

Step – 5:
ஒரு கிண்ணத்தில் காய்ச்சி ஆறவைத்த பாலில் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அல்லது குங்குமப்பூ பாலில் கலந்து சேர்த்துக்கொள்ளலாம்.

Step – 6:
மீண்டும் தயார் செய்த பிரியாணி மசாலாவை வைக்கவும். வேகவைத்த பிரியாணி சாதம் வறுத்து தனியே எடுத்துவைத்த வெங்காயம் சேர்க்கவும். காய்ச்சி ஆறவைத்த பாலில் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அல்லது குங்குமப்பூ பாலில் கலந்து சேர்த்துக்கொள்ளலாம். சிறிதளவு மல்லியிலை புதினாயிலை சேர்த்து 30 நிமிடம் மூடியை மூடி (low Flame) குறைந்த தீயில் வைக்கவும்.



Step – 7:
30 நிமிடம் கழித்து நம்முடைய சுவையான உருளைக்கிழங்கு தம் பிரியாணி தயார்…
  

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/aloo-65-dum-biryani-aloo-biryani-gokis-kitchen/

1 thought on “உருளைக்கிழங்கு 65 தம் பிரியாணி / Goki’s Kitchen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *