Site Overlay

Potato Garlic Rings in Tamil / Potato Rings / Snacks Recipe / Goki’s Kitchen

Potato Garlic Rings செய்ய தேவையான பொருட்கள்:

1. ரவை – 1/2 கப்
2. வேகவைத்த உருளைக்கிழங்கு – 3
3. வெண்ணை – 2 ஸ்பூன்
4. பூண்டு – 25 பல் (துருவியது)
5. சில்லி பிளேக் / மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் (தேவைக்கேற்ப)
6. தண்ணீர் – 2 கப்
7. உப்பு தேவைக்கேற்ப
8. பெருங்காயம் சிறிதளவு
9. மல்லித்தழை சிறிதளவு
10. சோளமாவு – 2 ஸ்பூன்
11. மைதாமாவு – சிறிதளவு
12. எண்ணெய் ரிங்க பொறிக்க தேவையான அளவு

Potato Garlic Rings in Tamil / Potato Rings / Snacks Recipe / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு மிக்ஸிஜரியில் ரவை – 1/2 கப் சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும்.

Step – 2:
குக்கரியில் உருளைக்கிழங்கு – 3 சேர்த்து 5 விசில் விட்டு ஆறியதும் நன்கு மசித்து தனியே வைக்கவும் .

Step – 3:
ஒரு வாணலியில் வெண்ணை – 2 ஸ்பூன் சேர்த்து, பூண்டு – 25 பல் (துருவியது), சில்லி பிளேக் / மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் (தேவைக்கேற்ப) சேர்த்து பூண்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும் .

Step – 4:
பின் தண்ணீர் – 2 கப், உப்பு தேவைக்கேற்ப, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். 

Step – 5:
கொதிவந்ததும் அடுப்பை low flame யில்வைத்து பொடி செய்த ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும். 

Step – 6:
நன்கு மசித்து வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும்.

Step – 7:
ஆறியதும் 1 நிமிடம் நன்கு கைவைத்து கலந்துகொள்ளவும். பின் மல்லித்தழை சிறிதளவு, சோளமாவு – 2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும். 

Step – 8:
ஒரு கட்டையில் பட்டர் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி, கலந்த மாவு எடுத்து சிறி சிறி உருண்டையாக செய்துகொள்ளவும் .

  

Step – 9:
அதே பட்டர் பேப்பரியில் மைதாமாவு – சிறிதளவு சேர்த்து உருண்டையாக செய்த மாவை வைத்து மெதுவாக உருட்டவும் ரிங் போல செய்துகொள்ளவும்.

Step – 10:
மிதமான சூட்டில் எண்ணெய் வைத்து நன்கு பொரித்து எடுக்கவும் .

 

நம்முடைய சுவையான Potato Garlic Rings தயார்..

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/potato-garlic-rings-potato-rings-snacks-recipe-gokis-kitchen/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *