Site Overlay

Thinai dosai | Millet Dosa | Crispy Foxtail Millet Dosa Recipe in Tamil

செய்ய தேவையான பொருட்கள்:

1. திணை அரிசி – 3 கிளாஸ்
2. உளுந்து – 1 கிளாஸ்
3. வெந்தயம் – 1/4 ஸ்பூன்
4. சிகப்பு அவல் – 1 கிளாஸ்
5. உப்பு தேவையான அளவு
6. நெய் அல்லது எண்ணெய் (தோசையில் ஊற்ற தேவைக்கேற்ப)

தினை தோசை | Millet Dosa Recipe in Tamil | Crispy Foxtail Millet Dosa | Weight Loss Millet Recipe செய்முறை:

தினை தோசை | Millet Dosa Recipe in Tamil | Crispy Foxtail Millet Dosa | Weight Loss Millet Recipe | Goki’s Kitchen செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் தினை அரிசி 3 கிளாஸ் எடுத்து கொள்ளவும். அதை 4 முதல் 5 தடவை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து தனியே வைக்கவும்.

Step – 2:
இன்னொரு பாத்திரத்தில் உளுந்து 1 கிளாஸ் சேர்த்து அதனுடன் வெந்தயம் சிறிதளவு சேர்த்து 4 முதல் 5 தடவை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து தனியே வைக்கவும்.

Step – 3:
இன்னொரு பாத்திரத்தில் சிகப்பு அவல் 1 கிளாஸ் சேர்த்து மாவு ஆடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அவலை நன்கு கழுவி ஊறவைக்கவும்.(அரை மணி நேரத்திற்கு முன்பு). அவல் அதிக நேரம் ஊற தேவையில்லை.

Step – 4:
தினை அரிசி மற்றும் உளுந்து இரண்டும் 6 மணி நேரம் வேண்டும். 

Step – 5:
6 மணி நேரத்திற்கு பிறகு, முதலில் உளுந்தில் உள்ள தண்ணீரை நன்கு அலசி நீரை கீழே கொட்டவும். பின்பு ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி மிஸ்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியே வைக்கவும்.

Step – 6:
பின்பு தினை அரிசி மற்றும் அரை மணி நேரம் ஊறவைத்த அவல் சேர்த்து தேவையான அளவு தன்னீர் சேர்த்து நன்கு அரைத்து அதே பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும்.

Step – 7:
இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

Step – 8:
6 மணி நேரம் கழித்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து தவாவை சூடு செய்து, மாவை ஊற்றி, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுடவும்.

  

Step – 9:
சுவையான தினை தோசை தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/millet-dosa-recipe-in-tamil-crispy-foxtail-millet-dosa-weight-loss-millet-recipe-gokis-kitchen/

1 thought on “Thinai dosai | Millet Dosa | Crispy Foxtail Millet Dosa Recipe in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *