Site Overlay

Chana masala / Chana Masala Recipe in Tamil / Chole Masala in Tamil / Goki’s Kitchen

சென்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 6 ஸ்பூன்
2. வெங்காயம் – 2 
3. இஞ்சி – 2 இன்ச்
4. பூண்டு – 8 பல்
5. தக்காளி – 2
6. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
7. கரம் மசாலா – 1 ஸ்பூன்
8. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
9. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
10. சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
11. மல்லிதூள் – 2 ஸ்பூன்
12. உப்பு தேவையான அளவு
13. கறிவேப்பிலை சிறிதளவு
14. பச்சைமிளகாய் – 2
15. சீரகம் – 1/2 ஸ்பூன்
16. கொண்டைக்கடலை தேவையான அளவு (8 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்)

Chana masala / Chana Masala Recipe in Tamil / Chole Masala in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 2 ஸ்பூன், சேர்த்து வெங்காயம் – 2,  இஞ்சி – 2 இன்ச், பூண்டு – 8 பல்
சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.(low flame)

Step – 2:
பின் தக்காளி – 2 சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மாசியும் வரை.

Step – 3:
தக்காளி நன்கு மசிந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து கொண்டு காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
மல்லிதூள் – 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்து மிஸ்சியில் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்கு ஆறியதும் மிஸ்சியில் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

Step – 4:
அதே வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன்  சேர்த்து கறிவேப்பிலை சிறிதளவு, பச்சைமிளகாய் – 2
சீரகம் – 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்து பின் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்துவிடவும்.

Step – 5:
கொண்டைக்கடலை தேவையான அளவு (8 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்). மசாலாவில் சேர்த்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிடவும். கெட்டியானதும் பாதி கொண்டைக்கடலையை மசித்துவிடவும். 

 

நம்முடைய சுவையான சென்னா மசாலா தயார் …

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/chana-masala-channa-masala-recipe-chole-masala-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *