Site Overlay

Potato gravy for Chapathi & Poori Tamil / Potato Gravy in Tamil / Urulaikilangu gravy / Goki’s Kitchen

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 8 ஸ்பூன்
2. சின்ன வெங்காயம் – 15
3. பூண்டு – 15
4. தக்காளி – 1
5. முந்திரி – 7
6. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
7. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
8. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
9. கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
10. கொத்தமல்லிதூள் – 1 & 1/2 ஸ்பூன்
11. உப்பு தேவையான அளவு
12. கறிவேப்பில்லை சிறிதளவு
13. பச்சைமிளகாய் – 1
14. உருளைக்கிழங்கு – 3 (50% வேகவைத்து)

Potato gravy for Chapathi & Poori Tamil / Potato Gravy in Tamil / Urulaikilangu gravy / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 15 சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் .

Step – 2:
நன்கு பழுத்த தக்காளி 1 சேர்த்து அத்துடன் முந்திரி – 7 சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

Step – 3:
பின் அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், கொத்தமல்லிதூள் – 1 & 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு நன்கு கலந்து அடுப்பைஅணைக்கவும் . நன்கு ஆறியதும் மிஸ்சியில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 

Step – 4:
அதே வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன், கறிவேப்பில்லை சிறிதளவு சேர்த்து பச்சைமிளகாய் – 1  சேர்த்து பின் அரைத்த பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும் . 

நம்முடைய சுவையான உருளைக்கிழங்கு கிரேவி தயார் …

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/potato-gravy-for-chapathi-poori-potato-gravy-gokis-kitchen/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *