Site Overlay

Pudina Thakkali Chutney | புதினா தக்காளி சட்னி | Side Dish for Idli and Dosa | Tomato Mint Chutney – Goki’s kitchen

தேவையான பொருட்கள்: 

1.எண்ணெய் தேவையான அளவு
2. கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
3. பச்சை மிளகாய் – 4
4. புதினா ஒரு கையளவு
5. தக்காளி – 4
6. உப்பு தேவையான அளவு
7. கடுகு – 1/2 ஸ்பூன்
8. மிளகாய்வத்தல் – 4
9. கருவேப்பிலை சிறிதளவு
10. பெருங்காயம் சிறிதளவு

Pudina Thakkali Chutney | புதினா தக்காளி சட்னி | Side Dish for Idli and Dosa | Tomato Mint Chutney –எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் -4 ஸ்பூன் சேர்த்து ,கடலைப்பருப்பு – 3 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

Step – 2:
பச்சை மிளகாய் – 4 சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

Step – 3:
புதினா ஒரு கையளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


Step – 4:
தக்காளி – 4 ,உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். (மிதமான தீயில்) 

Step – 5:
ஆறியதும் மிக்சிஜரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். 

Step – 6:
தாளிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு – 1/2 ஸ்பூன் ,மிளகாய்வத்தல் – 4 ,கருவேப்பிலை சிறிதளவு
சேர்த்து, அரைத்த சட்னி சேர்த்து , கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.நம்முடைய சுவையான தக்காளி புதினா சட்னி தயார்…  

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *