Site Overlay

Chicken Biryani | Pressure Cooker Chicken Biryani Recipe | சிக்கன் பிரியாணி – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. நெய் தேவையான அளவு
2. எண்ணெய் தேவையான அளவு
3. சின்ன வெங்காயம் – 15
4. மிளகாய்வந்தால் – 5
5. பச்சை மிளகாய் – 2
6. இஞ்சி – 1 இன்ச்
7. பூண்டு – 20 பல்
8. மல்லித்தழை & புதினா தேவையான அளவு
9. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
10. மிளகாய்த்தூள் – 1-&1/2 ஸ்பூன்
11. பிரியாணி மசாலா – 3 ஸ்பூன்
12. சோம்பு – 1/2 ஸ்பூன்
13. சீரகம் -1/2 ஸ்பூன்
14.பிரயாணி இலை – 3
15. பட்டை – 1
16. கருப்பு ஏலக்காய் – 1
17. அன்னாசிப்பூ – 1
18. ஜாவிதிரி – 1
19.பச்சை ஏலக்காய் – 3
20.கிராம்பு – 6
21. பெரிய வெங்காயம் – 2
22. தக்காளி – 5 (பியூரி செய்ய)
23. கஷ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
24. சிக்கன் – 1/2 கிலோ
25.உப்பு தேவையான அளவு
26. தேங்காய்ப்பால் – 5 டம்ளர்
27. சீராக சம்பா அரிசி – 2&1/2 டம்ளர்
28. லெமன் ஜூஸ் -1 ஸ்பூன் 

Chicken Biryani | Pressure Cooker Chicken Biryani Recipe | சிக்கன் பிரியாணி – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் நெய் 3 ஸ்பூன் சேர்த்து ,சின்ன வெங்காயம் – 15

மிளகாய்வந்தால் – 5, பச்சை மிளகாய் – 2 , இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 20 பல்,மல்லித்தழை ஒரு கையளவு , புதினா ஒரு கையளவு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும். நன்கு ஆறியதும் மிக்சிஜரில் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகியதூள் – 1&1/2 , பிரியாணி மசாலா – 3 ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தனியா வைக்கவும்.

     

Step -2 :
அதே வாணலியில் நெய் 4 ஸ்பூன் , எண்ணெய் – 2 ஸ்பூன் சேர்த்து சோம்பு -1/2 ஸ்பூன்,சீரகம் -1/2 ஸ்பூன்,
பிரயாணி இலை – 3, பட்டை – 1, கருப்பு ஏலக்காய் – 1, அன்னாசிப்பூ – 1, ஜாவிதிரி – 1, பச்சை ஏலக்காய் – 3
கிராம்பு – 6, சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

 

Step -3 :
2 பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும் .

Step -4:
பின் 5 பெரிய சைஸ் தக்காளியை மிக்சிஜரில் அரைத்து பியூரி செய்து சேர்க்கவும்.நன்கு எண்ணெய் பிரியும் அளவு வதக்கவும்.  பின் காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் , சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து மூடி போட்டு நன்கு எண்ணெய் பிரியும் அளவு வதக்கவும். 

Step -5:
பின் ஒரு குக்கரில் நெய் – 5 ஸ்பூன் சேர்த்து வதக்கிய மசாலாவை சேர்த்து,சிக்கன் -500 சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து, தேங்காய் பால் – 5 டம்ளர் சேர்த்து மல்லித்தழை & புதினா சிறிதளவு சேர்த்து,  ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு கலந்து 4 விசில் விட்டு எடுக்கவும். 

Step -6:
சீரகச்சம்பா அரிசி 2&1/2 டம்ளர் ஒரு மணி நேரம் ஊறவைத்து சேர்த்து, கலந்து 1 விசில் விட்டு 20 நிமிடம் கழித்து எடுக்கவும். நம்முடைய சுவையான சிக்கன் பிரியாணி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 




 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *