Site Overlay

Pepper chutney recipe in tamil / Milagu chutney / Chutney / Goki’s Kitchen

மிளகு சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

1. மிளகு – 2 ஸ்பூன்
2. வெந்தயம் – 1/4 ஸ்பூன்
3. சிவப்பு மிளகாய் / மிளகாய் வத்தல் – 7
4. தக்காளி – 4
5. தேங்காய் – 3 ஸ்பூன்
6. எண்ணெய் – 4 ஸ்பூன்
7. உப்பு

தாளிக்க :

1. எண்ணெய் – 2 ஸ்பூன்
2. கறிவேப்பிலை – சிறிதளவு
3. சீரகம் – 1/4 ஸ்பூன்
4. பெருங்காயம் சிறிதளவு
5. மிளகாய் வத்தல் – 2

Pepper chutney recipe in tamil / Milagu chutney / Chutney /செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 1 ஸ்பூன் சேர்த்து, மிளகுத்தூள் – 2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன்,
சிவப்பு மிளகாய் / மிளகாய் வத்தல் – 7 சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். (Low flame). 3 நிமிடம் கழித்து அதை மிஸ்சர்ஜருக்கு மாற்றவும். 

Step – 2:
பின் அதே வாணலியில் எண்ணெய் 4 ஸ்பூன் சேர்த்து தக்காளி – 4, உப்பு தேவையான அளவு சேர்த்து தக்காளி நன்கு மாசியும் வரை வதக்கவும். 

Step – 3:
பின் தேங்காய் 3 ஸ்பூன் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அடுப்பை அணைத்து நன்கு ஆறியதும் மிஸ்சிக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்கு அரைத்து தனியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

Step – 4:
தாளிக்க:
எண்ணெய் – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சீரகம் – 1/4 ஸ்பூன், மிளகாய் வத்தல் – 2, பெருங்காயம் சிறிதளவு சட்னியில் சேர்க்கவும். நம்முடைய சுவையான மிளகு சட்னி தயார்…

 

நம்முடைய சுவையான மிளகு சட்னி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/pepper-chutney-recipe-milagu-chutney-chutney-recipes-gokis-kitchen/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *