Site Overlay

Paruppu illatha sambar – Sambar – Salem special sambar – idly side dishes in tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. பொரிகடலை – 50 கிராம்
2. சோம்பு – 1/2 ஸ்பூன்
3. காய்ந்தமிளகாய் – 6
4. எண்ணெய் – 4 ஸ்பூன்
5. கடுகு – 1/4 ஸ்பூன்
6. சீரகம் – 1/4 ஸ்பூன்
7. பச்சைமிளகாய் – 1
8. கறிவேப்பிலை சிறிதளவு
9. சின்ன வெங்காயம் – 5
10. தக்காளி – 1
11. உப்பு தேவையான அளவு
12. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
13. பெருங்காயம் சிறிதளவு

Paruppu illatha sambar – Sambar – Salem special sambar – idly side dishes in tamil –செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் பொரிகடலை – 50 கிராம் சோம்பு – 1/2 ஸ்பூன்
சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை சமைக்கவும். பின் அடுப்பைஅனைத்து ஆறவிடவும்.

Step – 2:
ஆறியதும் மிஸ்சிஜரில் சேர்த்து அதனுடன் காய்ந்தமிளகாய் – 6
சேர்த்து நன்கு பொடி செய்து தனியே வைக்கவும்.

Step – 3:
பின் அதே வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1, கறிவேப்பிலை சிறிதளவு சின்ன வெங்காயம் – 5 சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

Step – 4:
பின் தக்காளி – 1 சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

Step – 5:
பின் பொடி செய்ததை அதில் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயம் சிறிதளவு சேர்த்து கொதிக்கவிடவும் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். நம்முடைய சுவையான சேலம் சாம்பார் தயார்…

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.