Site Overlay

Muttai Kuruma Recipe in Tamil – Egg Kurma in Tamil -Muttai Gravy – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் தேவையான அளவு
2. சின்ன வெங்காயம் – 15
3. கறிவேப்பிலை சிறிதளவு
4. மல்லித்தழை சிறிதளவு
5. தக்காளி – 2
6. சோம்பு – 1/2ஸ்பூன்
7. சீரகம் – 1/2 ஸ்பூன்
8. பூண்டு – 7 பல்
9. தேங்காய் சிறிதளவு
10. உப்பு தேவையான அளவு
11. குழம்பு பொடி – 3 ஸ்பூன்ஸ்
12. வேகவைத்த முட்டை – 5
13. பெருங்காயம் சிறிதளவு

Muttai Kuruma Recipe in Tamil – Egg Kurma in Tamil -Muttai Gravy – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன் சேர்த்து, சின்ன வெங்காயம் – 15, கறிவேப்பிலை சிறிதளவு, மல்லித்தழை சிறிதளவு, தக்காளி – 2
சேர்த்து நன்கு தக்காளி மசியும் வரை வதக்கவும். வதங்கியதும் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும்.

Step – 2:
பின் ஒரு மிஸ்சிஜரில் சோம்பு – 1/2ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் பூண்டு – 7 பல், தேங்காய் சிறிதளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும்.

 

Step – 3:
பின் வதக்கிய வெங்காயம், தக்காளி ஆறியது மிஸ்சியில் சேர்த்து உப்பு தேவையான அளவு பெருங்காயம் சிறிதளவு சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். 

Step – 4:
அதே வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து விடவும். 

 

Step – 5:
குழம்பு பொடி – 3 ஸ்பூன்ஸ் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சமைக்கவும். நன்கு கொதித்ததும் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

Step – 6:
10 நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்துவிட்டு 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

 

Step – 7:
10 நிமிடம் கழித்து வேகவைத்த முட்டை – 5 சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். நம்முடைய சுவையான முட்டை குருமா தயார்… 

   

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.