Site Overlay

Kuthiraivali Idly – (Barnyard Millet Idly) – & kara chutney – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

இட்லி தேவையான பொருட்கள்:

1. இட்லி அரிசி – 1 டம்ளர்
2. குதிரைவாலி அரிசி – 1 டம்ளர்
3. உளுந்து – 1/2டம்ளர்
4. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
5. உப்பு தேவையான அளவு

கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 5 ஸ்பூன்
2. கடலை பருப்பு – 5 ஸ்பூன்
3. பூண்டு – 4
4. புளி – சிறியது
5. சின்ன வெங்காயம் – 15
6. மிளகாய்வத்தல் – 12
7. தக்காளி – 6
8. உப்பு தேவையான அளவு
9. பெருங்காயம் சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 3 ஸ்பூன்
2. கருவேப்பில்லை சிறிதளவு
3. சீரகம் – 1/2 spoon
4. கடுகு – 1/2 ஸ்பூன்

Kuthiraivali Idly – (Barnyard Millet Idly) – & kara chutney – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி – 1 டம்ளர், குதிரைவாலி அரிசி – 1 டம்ளர், உளுந்து – 1/2டம்ளர் தனியே ஊறவைக்கவும் நன்கு 3 முதல் 4 தடவை கழிவு பின் வெந்தயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

    

Step – 2:
8 மணி நேரம் கழித்து உளுந்தை முதலில் அரைத்து தனியே எடுக்கவும். பின் அதை மிஸ்சிஜரில் அரிசி சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். உப்பு தேவையான அளவு நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்கக்கவைக்கவும்.

            

Step – 3:
8 மணி நேரம் கழித்து மாவு நன்கு புளித்து விட்டது. சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இட்லி பாத்திரத்தில் நெய் தடவி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இட்லி தட்டு வைத்து மூடி 10 நிமிடம் விடவும்.

         

Step – 4:
நம்முடைய சத்தான குதிரைவாலி இட்லி தயார்…

  

Step – 5:
கார சட்னி செய்ய ஒரு வாணலியில் எண்ணெய் – 5 ஸ்பூன், கடலை பருப்பு – 5 ஸ்பூன் பூண்டு – 4, புளி – சிறியது, சின்ன வெங்காயம் – 15 மிளகாய்வத்தல் – 12 சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

   

Step – 6:
தக்காளி – 6 சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.பின் ஆறவைத்து மிஸ்ஜரில் சேர்த்து உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

           

Step – 7:
தாளிக்க அதே வாணலியில் எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பில்லை சிறிதளவு சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன் சேர்த்து அரைத்த சட்னி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.

நம்முடைய காரா சட்னி தயார்…

 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *