தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு – 1 கப்
2 உப்பு சிறிதளவு
3. சர்க்கரை – 1 கப்
4. எண்ணெய் – தேவையான அளவு
5. நெய் – 3 ஸ்பூன்
6. முந்திரி சிறிதளவு
7. கிஸ்மிஸ் – சிறிதளவு
Boondi Laddu Recipe in Tamil – பூந்தி லட்டு – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து இந்த பக்குவத்தில் வைக்கவும்.
Step – 2:
ஒரு வாணலியில் 1 கப் சர்க்கரை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகுபதத்தில் வந்ததும் ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
Step – 3:
பின் பூந்தி செய்ய எண்ணெய் தேவையான அளவு சேர்த்து சூடானதும் பூந்தி தயார் செய்து சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊறவிடவும்.
Step – 4:
தயார் செய்த பபூந்தியில் பாதியை மட்டும் மிஸ்சிஜரில் சேர்த்து நன்கு அரைத்து கடாயில் சேர்க்கவும்
Step – 5:
ஒரு வாணலியில் நெய் – 3 ஸ்பூன் சேர்த்து சூடானதும் முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து வறுத்து எடுத்து பூந்தியில் சேர்க்கவும். சேர்த்து நன்கு கலந்து விட்டு பின் வெதுவெதுப்பாக இருக்கும் போது லட்டு பிடிக்கவும் நம்முடைய சுவையான லட்டு தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.