Site Overlay

Wheat Parotta in Tamil – Gothumai Parotta – Chicken Salna – Chicken Salna for Parotta in Tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

கோதுமை பரோட்டா செய்ய தேவையான பொருட்கள் :

1. கோதுமை மாவு – 2 கப்
2. உப்பு தேவையான அளவு
3. பொடி செய்த சக்கரை – 1/2 ஸ்பூன்
4. எண்ணெய் தேவையான அளவு

சிக்கன் சால்னா செய்ய தேவையான அளவு:

1. சிக்கன் – 1/2 கிலோ
2. சீரகம் – 1 ஸ்பூன்
3. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
4. உப்பு தேவையாள அளவு
5. எண்ணெய் தேவையாள அளவு
6. சின்ன வெங்காயம் – 20
7. பூண்டு – 15
8. தக்காளி – 2
9. கொத்தமல்லித்தழை சிறிதளவு
10. கறிவேப்பிலை சிறிதளவு
11. தேங்காய் சிறிதளவு – 1/2 கப்
12. கொத்தமல்லிதூள் – 1 & 1/2 ஸ்பூன்
13. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
14. கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
15. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
16. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
17. பச்சைமிளகாய் – 1

Wheat Parotta in Tamil – Gothumai Parotta – Chicken Salna – Chicken Salna for Parotta in Tamil – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
கோதுமை பரோட்டா செய்ய முதலில் கோதுமை மாவு – 2 கப், உப்பு தேவையான அளவு, பொடி செய்த சக்கரை – 1/2 ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன்  சேர்த்து கலந்துகொள்ளவும். மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும் (10 நிமிடம்)

   

Step – 2:
10 நிமிடம் பிசைந்த பின் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். 

 

Step – 3:
சிக்கன் – 1/2 கிலோ, சீரகம் – 1/2 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் , உப்பு தேவையாள அளவு தண்ணீர் 1&1/2 டம்ளர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு எடுக்கவும்.

 

Step – 4:
எண்ணெய் – 4 ஸ்பூன்,  சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 15, தக்காளி – 2, கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு, தேங்காய் சிறிதளவு – 1/2 கப் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்

Step – 5:
பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலா சேர்க்கவும். கொத்தமல்லிதூள் – 1 & 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும். 

Step – 6:
மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

Step – 7:
குக்கரில் வேகவைத்த சிக்கன் நன்கு வந்துவிட்டது. 

Step – 8:
எண்ணெய் – 4 ஸ்பூன் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் -1 சேர்த்து கலந்துவிடவும். பின் மிக்ஸியில் அரைத்த மசாலா சேர்த்து நன்கு எண்ணெயுடன் கலந்து விடவும். 

Step – 9:
வேகவைத்த சிக்கன் சேர்த்து சிக்கன் சூப் சேர்த்து நன்கு 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.நம்முடைய சுவையான சிக்கன் சால்னா தயார்… 

Step – 10:
மாவு 30 நிமிடம் நன்கு ஊறி விட்டது. மேலும் 5 நிமிடம் மாவை பிசைந்து சிறு சிறு உருண்டையாக செய்து கொள்ளவும்.

Step – 11:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை எடுத்துக் கொள்ளவும். மாவை உருட்டி கத்தியால் கோடு போட்டு கொள்ளவும். பின் எண்ணெய் சேர்த்து அதை எடுத்து விடவும். கொஞ்சம் இழுத்துவிட்டு மடிக்கவும். எல்லா மாவையும் எப்படி செய்து கொள்ளவும்.

  

Step – 12:
ஒரு மாவை எடுத்து மெல்ல தேய்த்துக் கொள்ளவும். தவாவை சுடவைத்து பரோட்டா போட்டு எடுக்கவும். நம்முடைய சுவையான பரோட்டா தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.