Site Overlay

சோள தோசை – Chola dosai – Sorghum dosa – Millet recipes – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை சோளம் – 1 டம்ளர்
2. இட்லி அரிசி – 1 டம்ளர்
3. உளுந்து – 1/2 டம்ளர்
4. வெந்தயம் – 1/2 ஸ்பூன்
5. உப்பு தேவையான அளவு

சோள தோசை – Chola dosai – Sorghum dosa – Millet recipes – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் வெள்ளை சோளம் – 1 டம்ளர், இட்லி அரிசி – 1 டம்ளர் சேர்த்து 3 முதல் 4 வரை நன்கு கழுவி கொள்ளவும். அத்துடன் வெந்தயம் – 1/2 ஸ்பூன் சேர்த்து ஊறவைக்கவும்.

Step – 2:
பின் உளுந்து – 1/2 டம்ளர் தனியே ஊறவைக்கவும். அதையும் 3 முதல் 4 வரை நன்கு கழுவி கொள்ளவும்.

Step – 3:
8 மணி நேரம் ஊறவைக்கவும். 

Step – 4:
8 மணி நேரம் கழித்து முதலில் உளுந்தை மிஸ்சியில் அரைக்கவும். அரைத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

  

Step – 5:
பின் அதே மிஸ்சிஜரில் ஊறவைத்த சோளம், இட்லி அரிசி, வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

 

Step – 6:
உளுந்து சேர்த்த அதே மாவில் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

 

Step – 7:
8 மணி நேரம் கழித்து மாவை கலந்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசை சுடவும்.

        

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *