Site Overlay

சோயா புலாவ் -Soya Pulav Recipe in Tamil – மீல் மேக்கர் புலாவ் – Meal Maker Pulao – Soya Chunks Pulao – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. மீல்மேக்கர் – 1 கப்
2. தயிர் – 1/4 கப்
3. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
4. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்ஸ்
5. கரம் மசாலாதூள் – 1 ஸ்பூன்
6. உப்பு தேவையான அளவு
7. பச்சைமிளகாய் – 1
8. இஞ்சி – 1 இன்ச்
9. பூண்டு – 10 பல்
10. எண்ணெய் – 2 ஸ்பூன்
11. நெய் – 2 ஸ்பூன்
12. சீரகம் – 1/2 ஸ்பூன்
13. சோம்பு – 1/2 ஸ்பூன்
14. கிராம்பு – 3
15. பட்டை – 1
16. பிரியாணி இலை – 3
17. கருப்பு ஏலக்காய் – 1
18. பச்சை ஏலக்காய் – 2
19. அன்னாசி பூ – 1
20. ஜாவிதிரி – 1
21. வெங்காயம் – 2
22. தக்காளி – 2
23. சீராக சம்பா அரிசி – 2 டம்ளர்
24. மல்லித்தழை சிறிதளவு

சோயா புலாவ் -Soya Pulav Recipe in Tamil – மீல் மேக்கர் புலாவ் – Meal Maker Pulao – Soya Chunks Pulao –செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கர் – 1 கப் சேர்த்து கொதிக்கும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.

 

Step – 2:
பின் 15 நிமிடம் கழித்து தண்ணீர் வடிகட்டி சோயாவை நன்கு தணண்ணீர் இல்லாமல் பிழிந்துகொள்ளவும்.பிறகு மீன் மேகரில் தயிர் – 1/4 கப் மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

Step – 3:
ஒரு மிக்சிஜரில் பச்சைமிளகாய் – 1 , இஞ்சி – 1 இன்ச் , பூண்டு – 10 பல் , மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் , கரம் மசாலாதூள் – 1 ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 

Step – 4:
குக்கரில் எண்ணெய் – 2 ஸ்பூன் ,நெய் – 2 ஸ்பூன் ,சீரகம் – 1/2 ஸ்பூன் ,சோம்பு – 1/2 ஸ்பூன்
கிராம்பு – 3 ,பட்டை – 1 ,பிரியாணி இலை – 3 , கருப்பு ஏலக்காய் – 1 , பச்சை ஏலக்காய் – 2
அன்னாசி பூ – 1,  ஜாவிதிரி – 1  , வெங்காயம் – 2  சேர்த்து வெங்காயம் நன்கு பொன்நிறம் ஆகும் வரை வதக்கவும்.

 

Step – 5:
தக்காளி – 2 சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்

 

Step – 6:
பின் அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.

Step – 7:
பின் ஊற வைத்த மீன் மேக்கர் சேர்த்து 3 நிமிடம் கலந்து கொள்ளவும்.

Step – 8:
பின் 30 நிமிடங்களுக்கு முன் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்துக்கொள்ளவும்.
2 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கடைசியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்துகொள்ளவும்.  கொதிவந்ததும் குக்கரை மூடி 1 விசில் விட்டு 20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.
நம்முடைய சுவையான மணமான மீல் மேக்கர் புலாவ் தாயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *