Site Overlay

Matar Masala Recipe in Tamil / Green Peas Masala Recipe in Tamil / Goki’s Kitchen

பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள் :

1. வெண்ணை – 5 ஸ்பூன்
2. வெங்காயம் – 2
3. தக்காளி – 4
4. இஞ்சி – 2 இன்ச்
5. பூண்டு – 10
6. முந்திரி – 7
7. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
8. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
9. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
10. உப்பு தேவையான அளவு
11. ஏலக்காய் – 2
12. பட்டை – 1
13. கிராம்பு – 3
14. சீரகம் – 1/4 ஸ்பூன்
15. வேகவைத்த பச்சை பட்டாணி தேவையான அளவு

Matar Masala Recipe in Tamil / Green Peas Masala Recipe in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் வெண்ணை – 3 ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – 2 இன்ச், பூண்டு – 10, முந்திரி – 7 சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து சமைக்கவும். 

Step – 2:
பின் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து சமைக்கவும். பின் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

Step – 3:
ஆறியதும் மிஸ்சிஜரில் சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். 

Step – 4:
அதே வாணலியில் வெண்ணை – 2 ஸ்பூன் சேர்த்து ஏலக்காய் – 2,பட்டை – 1, கிராம்பு – 3, சீரகம் – 1/4 ஸ்பூன்
சேர்த்து கலந்துவிடவும்.

Step – 5:
அரைத்த மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்குகலந்து மூடு போட்டு மூடி மிதமான தீயில் வைக்கவும்.

Step – 6:
கொதிவந்ததும் வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மூடி போட்டு சமைக்கவும்(Low flame). 

Step – 7:
நம்முடைய சுவையான பச்சை பட்டாணி மசாலா தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/matar-masala-peas-masala-green-peas-masala-gokis-kitchen/