Site Overlay

Onion Chutney in Tamil / Vengaya Chutney / Goki’s Kitchen

வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

1. எண்ணெய் – 3 ஸ்பூன்
2. பூண்டு – 4 பல்
3. வெங்காயம் – 4
4. தக்காளி – 2
4. மிளகாய்வத்தல் – 5
5. தேங்காய் – 2 ஸ்பூன்
6. உப்பு தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 3 ஸ்பூன்
2. கறிவேப்பிலை சிறிதளவு
3. உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
4. கடுகு – 1/4 ஸ்பூன்
5. சீரகம் – 1/4 ஸ்பூன்
6. மிளகாய்வத்தல் – 2

Onion Chutney in Tamil / Vengaya Chutney / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

சட்னி செய்ய:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 3 ஸ்பூன், பூண்டு – 4, வெங்காயம் – 4, தக்காளி – 2 , சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

Step – 2:
5 நிமிடம் கழித்து மிளகாய்வத்தல் – 5, தேங்காய் – 2 ஸ்பூன் சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து வைத்து வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

Step – 3:
ஆறிய பின் மிஸ்சிஜரில் சேர்த்து தேவையான அளவு உப்பு  சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தாளிக்க

Step – 1:
எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை சிறிதளவு, உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன்
சீரகம் – 1/4 ஸ்பூன் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும்.

Step – 2:
நம்முடைய சுவையான வெங்காய சட்னி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/onion-chutney-easy-onion-chutney-side-dish-for-idly-dosa-gokis-kitchen/