தேவையான பொருட்கள்:
1. அரிசி மாவு – 1 கப்
2. தண்ணீர் – 1&1/4 கப் (ஒன்னேகால் கப்)
3. உப்பு – சிறிதளவு
4. எண்ணெய் – 1 ஸ்பூன்
idiyappam recipe | nool puttu | kerala style idiyappam with rice flour | இடியாப்பம் செய்வது எப்படி? – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் 1 கப் அரிசி மாவு சேர்த்து 5 நிமிடம் (dry roast) செய்து கொள்ளவும் (மிதமான தீயில்).
வறுத்த மாவை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
Step – 2:
பின் அதே வாணலியில் 1&1/4 கப் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
Step – 3:
கொதித்ததும் வறுத்த அரிசிமாவை சேர்க்கவும். அரிசி மாவு சேர்த்து அடுப்பை அணைத்து கை தாங்கும் சூடு வந்ததும் மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
Step – 4:
இடியாப்பம் பிழியும் குழாயில் மாற்றி பிழியவும்.இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .இட்லி தட்டில் இடியாப்பம் பிழிந்ததும் இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் சமைக்கவும். 10நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். நம்முடைய சுவையை இடியாப்பம் தயார்.இடியாப்பத்தில் சர்க்கரை, துருவிய தேங்காய் சேர்த்து பரிமாறவும்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.