Site Overlay

காளான் தோசை – Mushroom dosa in tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. தேங்காய் சிறிது
2. கொத்தமல்லித்தழை
3. தக்காளி – 1
4. மிளகாய் வத்தல் -5
5. பச்சை மிளகாய் -1
6. சின்ன வெங்காயம் – 10
7. இஞ்சி – 2 இன்ச்
8. பூண்டு – 10 பல்
9. சோம்பு – 1/4 ஸ்பூன்
10. சீரக தூள் – 1/4 ஸ்பூன்
11. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
12. கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
13. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
14. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
15. உப்பு தேவையான அளவு
16. தயிர் – 5 ஸ்பூன்
17. எண்ணெய் – 4 ஸ்பூன்
18. காளான் -200 கிராம்
19. வெண்ணை தேவையான அளவு
20. சீஸ் தேவையான அளவு
21. தேங்காய் அரை மூடி 

 

காளான் தோசை – Mushroom dosa in tamil – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:

மிக்சிஜரில் தேங்காய் சிறிது ,கொத்தமல்லித்தழை,தக்காளி – 1,மிளகாய் வத்தல் -5 ,பச்சை மிளகாய் -1 சின்னவெங்காயம் – 10,இஞ்சி – 2 இன்ச் ,பூண்டு – 10 பல் ,சோம்பு – 1/4 ஸ்பூன்,சீரக தூள் – 1/4 ஸ்பூன்,மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்,கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்,காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்,உப்புதேவையான அளவு, தயிர் – 5 ஸ்பூன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

 

Step – 2:
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் மூடி போட்டு சமைக்கவும்.

Step – 3:
பின் 200 கிராம் காளான் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி மசாலாவில் சேர்த்து 5 நிமிடம் நன்கு மூடி போட்டு சமைக்கவும்.

Step – 4:
அரை மூடி தேங்காய் தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து மசாலாவில் சேர்க்கவும். காளான் மசாலா நன்கு கெட்டியாகும் வரை சமைக்கவும்.

Step – 5:
அடுப்பில் கல் வைத்து  தோசை  சுட்டு அதில் காளான் மசாலா சேர்த்து வெண்ணெய் சேர்த்து சீஸ் சேர்த்து நன்கு வெந்ததும் எடுக்கவும் (திருப்பி போட வேண்டாம்) நம்முடைய காளான் தோசை ரெடி…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *