Site Overlay

Tawa pizza recipe in Tamil / Veg pizza on Tawa / Pizza without oven / Goki’s Kitchen

மினி தாவா பீட்ஸா செய்ய தேவையான பொருட்கள்:

1. மைதா – 4 கரண்டி
2. உப்பு தேவையான அளவு
3. எண்ணெய் – 1 ஸ்பூன்
4. பீட்ஸா டாப்பிங் – 5 ஸ்பூன்
5. சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
6. தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
7. பீட்ஸா சீசனிங் – 1 ஸ்பூன்
8. மோஸ்சரெல்லா சீஸ் தேவையான அளவு
9. நெயில் வறுத்த பன்னீர் தேவையான அளவு
10. தக்காளி (விதையெடுத்தது) தேவையான அளவு
11. வேகவைத்த ஸ்வீட் கார்ன் தேவையான அளவு
12. சிறிதளவு கொத்தமல்லித்தழை
13. ஓரிகானோ சிறிதளவு
14. ரெட் சில்லி பிளேஸ் சிறிதளவு
15. நெய் சிறிதளவு

Tawa pizza recipe in Tamil / Veg pizza on Tawa / Pizza without oven / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் மைதா – 4 கரண்டி, உப்பு தேவையான அளவுசேர்த்து கலந்துகொன்டு பின் எண்ணெய் – 1/2 ஸ்பூன் சேர்த்து பிசைந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். பிசைந்த பின் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1 நிமிடம் நன்கு பிசைந்து மாவை ரெண்டாக பிரிக்கவும்.

    

Step – 2:
பிரித்த மாவிலிருந்து ஒன்று எடுத்து எண்ணெய் 1/2 ஸ்பூன் சேர்த்து உருட்டவும்.பின் ஒரு கிண்ணத்தை பயன்படுத்தி வட்டவடிவமாக செய்து எடுத்து சப்பாத்தி போல செய்து தனியே ஒரு தட்டில் வைக்கவும். அணைத்து மாவையும் அதே போல செய்து வைக்கவும். பீட்ஸா பேஸ் தயார்.

       

Step – 3:
பீட்ஸா டாப்பிங் செய்ய:
பீட்ஸா டாப்பிங் – 5 ஸ்பூன், சில்லி சாஸ் – 1 ஸ்பூன், தக்காளி சாஸ் – 2 ஸ்பூன், பீட்ஸா சீசனிங் – 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பீட்ஸா சாஸ் தயார்.

   

Step – 4:
நாம் தயார் செய்த பீட்ஸா பேஸ் எடுத்து அதில் பீட்ஸா சாஸ் சிறிதளவு சேர்த்து நன்கு பரப்பவும். துருவிய மோஸ்சரெல்லா சீஸ் தேவையான அளவு, நெயில் வறுத்த பன்னீர் தேவையான அளவு
தக்காளி (விதையெடுத்தது) தேவையான அளவு, வேகவைத்த ஸ்வீட் கார்ன் தேவையான அளவு
சிறிதளவு கொத்தமல்லித்தழை, ஓரிகானோ சிறிதளவு, ரெட் சில்லி பிளேஸ் சிறிதளவு சேர்த்து தவாவில் நெய் சிறிதளவு சேர்த்து தயார் செய்த பீட்ஸா வைத்து (low flame) இல் 10 நிமிடம் சமைக்கவும். அல்லது சீஸ் உருகும் வரை சமைக்கவும். 

  

நம்முடைய சுவையான தாவா பீட்ஸா தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/tawa-pizza-veg-pizza-on-tawa-pizza-without-oven-gokis-kitchen/