Site Overlay

Pasi Paruppu Sambar / Sambar recipe in Tamil / Chappathi & poori Side dish / Goki’s Kitchen

பாசிப்பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

1. எண்ணெய் – 4 ஸ்பூன்
2. உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
3. சீரகம் – 1/4 ஸ்பூன்
4. கடுகு – 1/4 ஸ்பூன்
5. கறிவேப்பில்லை – சிறிதளவு
6. பச்சைமிளகாய் – 6
7. சின்ன வெங்காயம் – 10
8. தக்காளி – 2 
9. பாசிப்பருப்பு – 1 டம்ளர்
10. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
11. உப்பு தேவையான அளவு
12. மல்லித்தழை – சிறிதளவு

Pasi Paruppu Sambar / Sambar recipe in Tamil / Chappathi & poori Side dish / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கடுகு – 1/4 ஸ்பூன்,
கறிவேப்பில்லை – சிறிதளவு, பச்சைமிளகாய் – 6, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2 சேர்த்து நன்கு  தக்காளி நன்கு மசியும் வரை சமைக்கவும்.  வெந்ததும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.

   

Step – 2:
பின் குக்கரில் பாசிப்பருப்பு – 1 டம்ளர் சேர்த்து நன்கு 4 முறை கழுவி பின் வதக்கியதை சேர்த்து மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கடைசியாக மல்லித்தழை – சிறிதளவு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.

     

நம்முடைய சுவையான பாசிப்பருப்பு சாம்பார் தயார்… 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/moong-dal-sambar-without-sambar-powder-sambar-recipe-in-tamil-chappathi-poori-side-dish-gokis-kitchen/