Site Overlay

Kaara Ragi Idiyaapam / Spicy ragi idiyaapm / Ragi upma / Goki’s Kitchen

கார ராகி இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

1. ராகி மாவு – 2 கப்
2. அரிசி மாவு – 1/2 கப்
3. தண்ணீர் – 2 & 1/2 கப்
4. உப்பு சிறிதளவு
5. நெய் – 1/2 ஸ்பூன்

தாளிக்க:

1. நெய் – 3 ஸ்பூன்
2. உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
3. கடலை பருப்பு – 1/2 ஸ்பூன்
4. கடுகு – 1/2 ஸ்பூன்
5. கடலை – 2 ஸ்பூன்
6. முந்திரி – சிறிதளவு
7. கருவேப்பில்லை சிறிதளவு
8. பச்சைமிளகாய் – 2
9. மிளகாய் வத்தல் – 2
10. உப்பு தேவையான அளவு
11. தேங்காய் – 4 ஸ்பூன்
12. மல்லித்தழை சிறிதளவு

Kaara Ragi Idiyaapam / Spicy ragi idiyaapm / Ragi upma / Goki’s Kitchen செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:
இடியாப்பம் செய்ய:
Step – 1:
ஒரு வாணலியில் ராகி மாவு – 2 கப், அரிசி மாவு – 1/2 கப் சேர்த்து 5 நிமிடம் வறுத்து தனியே வைக்கவும்.

Step – 2:
பின் ஒரு பாத்திரத்தில் 2 & 1/2 தண்ணீர் சேர்த்து உப்பு சிறிதளவு நெய் – 1/2 ஸ்பூன் சேர்த்து கொதித்ததும் வறுத்த ராகி மாவில் சேர்த்து கை பொறுக்கும் அளவு சூடு வந்ததும் கை வைத்து நன்கு பிசைந்துகொள்ளவும்.(தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். சுடுதண்ணீர்).

Step – 3:
சின்ன ஓட்டை உள்ள மோல்ட் எடுத்து கொள்ளவும். இடியாப்ப அச்சில் எண்ணெய் – 1 ஸ்பூன் சேர்த்து பின்னர் அந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து மூடவும்.

Step – 4:
இட்லி தட்டில் நெய் தடவி பிழிய வேண்டும். பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும்  15 இட்லி  தட்டு  வைத்து 15 நிமிடம் மூடி வைத்து, இறக்கினால் சுவையான கேழ்வரகு இடியாப்பம் தயார். நன்கு ஆறியதும் உதித்து விட்டு தனியே வைக்கவும்.

   

Step – 5:
தாளிக்க :

நெய் – 3 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன், கடலை பருப்பு – 1/2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன்
கடலை – 2 ஸ்பூன், முந்திரி – சிறிதளவு, கருவேப்பில்லை சிறிதளவு, பச்சைமிளகாய் – 2,  மிளகாய் வத்தல் – 2
சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

       

Step – 6:
உதுத்துவிட்ட இடியாப்பம் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

   

Step – 7:
பின் தேங்காய் – 4 ஸ்பூன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும். நம்முடைய கார ராகி இடியாப்பம் தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Read it in English: https://english.gokiskitchen.com/spicy-ragi-idiyaapm-ragi-upma-finger-millet-gokis-kitchen/