Site Overlay

Crispy and Crunchy Potato Cheese Balls / Snacks recipe in tamil / Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. உருளைக்கிழங்கு – 250 கிராம்
2. மல்லித்தழை சிறிதளவு
3. கடலைமாவு – 2 ஸ்பூன்
4. சோளமாவு – 1 & 1/2 ஸ்பூன்
5. காஸ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
6. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
7. கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
8. மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்
9. உப்பு தேவையான அளவு
10. பெருங்காயம் சிறிதளவு
11. சோளமாவு – 3 ஸ்பூன்
12. பிரட் – 3 துண்டு
13. சீஸ் தேவையான அளவு
14. எண்ணெய் தேவையான அளவு

Crispy and Crunchy Potato Cheese Balls / Snacks recipe in tamil / Goki’s Kitchen – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் 250 கிராம் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கு சேர்க்கவும்.மல்லித்தழை சிறிதளவு, கடலைமாவு – 2 ஸ்பூன், சோளமாவு – 1 & 1/2 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன், கொத்தமல்லி தூள் – 1/4 ஸ்பூன் உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.

(தண்ணீர் சேர்க்க தேவையில்லை)
மாவு தயார்.

     

Step – 2:
ஒரு கிண்ணத்தில் சோலா மாவு – 3 ஸ்பூன் சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல செய்துகொள்ளவும். தனியே வைக்கவும்.

 

Step – 3:
பிரட் தூள் செய்ய ஒரு மிஸ்சிஜரில் 3 பிரட் சேர்த்து நன்கு பவுடர் செய்துகொள்ளவும்.

ஒரு பௌலில் எடுத்துக்கொள்ளவும்.

 

Step – 4:
சீஸ் எடுத்து அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும்.

 

Step – 5:
பிசைந்த மாவில் இருந்து சிறிது மாவு எடுத்து தட்டையாகி அதில் சீஸ் வைத்து உருண்டையாகவும்

Step – 6:
செய்த உருண்டையை சோளமாவில் சேர்த்து பிரட் தூளில் சேர்த்து தனியே வைக்கவும். அனைத்தையும் இதே போல தயார் செய்யவும்.

  

Step – 7:
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் செய்த உருண்டையை பொரிந்து எடுக்கவும். 

 

நம்முடைய சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *