தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 2 கப்
- கடலை மாவு – 1 கப்
- சீரகம் அரை ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- வெண்ணை – 3 ஸ்பூன்
- தண்ணீர் 1+1/4 ஒன்னேகால் கப்
மொறுமொறு பட்டர் முறுக்கு செய்வது எப்படி /Butter Murukku Recipe செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு, கடலை மாவு 1 கப், சீரகம் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணை 3 ஸ்பூன் அனைத்தையும் நன்கு கலந்து பின் உப்பு சரியாக உள்ளதா என்று சரி பார்த்து பின் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் மாக சேர்த்து மாவை முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
Step – 2:
முறுக்கு மாவு தயார் ஆனதும் ஒரு வாணலியில் முறுக்கு செய்ய தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.முறுக்கு அச்சு எடுத்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். மாவு எடுத்து முறுக்கு அச்சில் வைத்து பட்டர் முறுக்கு செய்ய ஆரம்பிக்கலாம்.முறுக்கு நன்றாக வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். சூடான, மொறு மொறுவென பட்டர் முறுக்கு தயார்.
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.