Site Overlay

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மட்டன் பிரியாணி/Pressure Cooker Mutton Biryani in Tamil/Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 
  1. மட்டன் – 1 கிலோ
  2. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு  
  5. சிறிய வெங்காயம் -6 பற்கள்
  6. பச்சை மிளகாய் – 2
  7. சிவப்பு மிளகாய் – 5
  8. தேங்காய் – 2 சிறிதளவு
  9. மல்லி தூள் – 1/2 ஸ்பூன்  
  10. புதினா இலைகள் சிறிதளவு
  11. கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  12. இஞ்சி 1 துண்டு 
  13. பூண்டு – 15 பற்கள்
  14. நெய் – 3 ஸ்பூன்
  15. எண்ணெய் – 1 ஸ்பூன்
  16. பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது )
  17. தக்காளி – 2  (நறுக்கியது )
  18. சாப்பாட்டு அரிசி – 2 &1/2 டம்ளர்  (30 நிமிடங்கள் ஊறவைத்தது ) 
  19. தேங்காய் பால் – 5 டம்ளர்
  20.  பட்டை – 1
  21. ஏலக்காய் – 5
  22. கிராம்பு – 6
  23. பிரியாணி இலை – 3
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மட்டன் பிரியாணி/Pressure Cooker Mutton Biryani in Tamil செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:

Step – 1:
மட்டன் பிரியாணி சமைக்க பெரிய மட்டன் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும் (மட்டன் 1 கிலோ ) . அதனுடன் மஞ்சள் தூள் 1/4ஸ்பூன், மிளகாய்த்தூள்2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு ஆகிவற்றை சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

Step – 2:
அடுத்தது மசாலா அரைக்க சிவப்பு மிளகாய் – 5,பச்சை மிளகாய் – 2,பூண்டு – 10 பற்கள்,இஞ்சி 1 துண்டு,சிறிய வெங்காயம் -6 பற்கள்,தேங்காய் சிறிதளவு ,புதினா இலை, கொத்தமல்லி இலை, மல்லித்தூள் 1/2 ஸ்பூன், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு மை போல் அரைக்க வேண்டும்.

Step – 3:
குக்கரில் நெய் 3 ஸ்பூன் , எண்ணெய் 1 ஸ்பூன் , பட்டை 1 , ஏலக்காய் – 5, கிராம்பு – 6, பிரியாணி இலை – 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 3  சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

Step – 4:
வெங்காயம் சிவந்த பிறகு நறுக்கிய 2 தக்காளி, அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.

 

Step – 5:
ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில் உப்பு, தேங்காய் பால் 5 டம்ளர் , கொத்தமல்லி இலை, புதினா இலை சிறிதளவு ஆகியவற்றை நன்கு கலந்து பின்பு மட்டன் நன்கு வேகும் வரை வேக வைக்கவும். ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும். 

Step – 6:
வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த அரிசியை கலந்த பின்பு குக்கரை மூடிவிட்டு ஒரு விசிலுக்கு சமைக்கவும். அடுப்பை அணைத்து விட்டு 20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும்.

Step – 7:
சூடான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மட்டன் பிரியாணி தயார்.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *