Site Overlay

Aval paal payasam in tamil/Poha milk kheer/சுவையான அவல் பாயாசம் – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 
  1. நெய் தேவையான அளவு
  2. பாதாம், கிஸ்மிஸ் தேவையான அளவு
  3. அவல் – 1 கப்
  4. வெல்லம் – 3/4 அளவு
  5. பால் – 3 கப்
  6. ஏலக்காய் சிறிதளவு
சுவையான அவல் பாயசம் செய்வது எப்படி / Aval paal payasam in tamil/Poha milk kheer செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் பாதாம் கிஸ்மிஸ் இரண்டையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் அவல் ஒரு கப் சேர்த்து நன்கு மொறு மொறு என்று வறுத்துக்கொள்ளவும்.

Step – 2:
வருத்ததும் மூன்று கப் பால் சேர்க்கவும். (அவல் எடுத்த கப்). காய்ச்சி ஆறவைத்த பால். பால் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து சமைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3/4 கப் அளவு வெல்லம் சேர்த்து ஏலக்காய் 5 சேர்த்து 3/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். (வெள்ளம் கரைந்து தண்ணீர் ஆகும்வரை). அடிக்கடி அவல் கலந்து விடவும்.வெல்லம் உருகி தண்ணீர் ஆனதும்.

Step – 3:
வடிகட்டி சேர்த்து .நன்கு கலந்து விடவும். கொதி வந்ததும் வறுத்த பாதாம், கிஸ்மிஸ் சேர்த்து கலந்து விடவும்.நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.சுவையான அவல் பாயசம் தயார்  

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *