தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – தேவையான அளவு
- பட்டை – 2
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 2
- சோம்பு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- தேங்காய் சிறிதளவு
- பிரியாணி இலை – 2
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள் – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி பவுடர் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்
- பிரியாணி இலை – 2
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை சிறிதளவு
- இஞ்சி 2 -இன்ச்
- பூண்டு – 10 பல்
- பொட்டுக்கடலை – 1 ஸ்பூன்
சுவையான பரோட்டா சால்னா – Parotta Salna In Tamil – kurma in tamil – Plain Salna in Tamil – Empty salna recipe in Tamil – Goki’s Kitchenசெய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் எண்ணெய் 6 ஸ்பூன் சேர்த்து, சோம்பு – 1/2 ஸ்பூன்,இஞ்சி 2 -இன்ச்,பூண்டு – 10 பல்,பெரிய வெங்காயம் – 1,தக்காளி – 2,தேங்காய் சிறிதளவு,பச்சை மிளகாய் – 1,கொத்தமல்லித்தழை சிறிதளவ
உப்பு – தேவையான அளவு சேர்த்து,பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் சேர்த்துவதக்கவும். தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும்.
Step – 2:
நன்கு வதக்கியதும் கொத்தமல்லி பவுடர் – 1 ஸ்பூன்,மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் – 1/2 ஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்,கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வைத்து 1 நிமிடம் வதக்கி பின் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும்.
Step – 3:
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்
Step – 4:
அதே வாணலியில் எண்ணெய் -2 ஸ்பூன் சேர்த்து சீரகம் – 1/4 ஸ்பூன், பிரியாணி இலை – 2 , ஏலக்காய் – 2,
பட்டை – 2, கிராம்பு – 4, சோம்பு – 1/4 ஸ்பூன் , சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் பின் அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். சிறிது கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். நம்முடைய சுவையான மணமான சால்னா தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.