Site Overlay

கழனி புளிச்சாறு செய்வது எப்படி|Kazhani PulicharuMadurai|Special Puli Saaru|கழனி ரசம்|Puli rasam in Tamil|Tamarind rasam|Goki’s kitchen

தேவையான பொருட்கள்:

1. அரிசி கழுவிய தண்ணீர் – 4 டம்ளர்
2. எண்ணெய் -4 ஸ்பூன்
3. கடுகு – 1/2 ஸ்பூன்
4.பெரிய வெங்காயம் -1
5.பெரிய தக்காளி – 1
6. கறிவேப்பில்லை சிறிதளவு
7. பூண்டு – 20 பல்
8. புளி – பெரிய லெமன் சைஸ்
9. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
10. உப்பு தேவையான அளவு
11. பெருங்காயம் சிறிதளவு

கழனி புளிச்சாறு செய்வது எப்படி|Kazhani PulicharuMadurai|Special Puli Saaru|கழனி ரசம்|Puli rasam in Tamil|Tamarind rasam செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் அரிசியை நன்கு கழுவி முதலில் கழுவிய தண்ணீரை கீழே ஊற்றவும். பின் 2 வது 3 வது கழுவிய தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதில் புளி (பெரிய லெமன் சைஸ்) எடுத்து அரிசி தண்ணீரில் போடவும் 15 நிமிடம் நன்கு ஊறட்டும்.

Step – 2:
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும்  பெரியவெங்காயம் -1 , பெரிய தக்காளி – 1 , கறிவேப்பில்லை சிறிதளவு , பூண்டு – 20 பல்(நன்கு தட்டி சேர்க்கவும்)
சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்(High flame).
 

Step – 3:
பின் 18 – காய்ந்த மிளகாய், 5 – பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் நன்கு மிதமான தீயில் வைத்து வதக்கவும். 

Step – 4:
அரிசி தண்ணீரில் ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக்கவும். 

Step – 5:
பின் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். நம்முடைய சுவையான மணமான கழனி ரசம் தயார்… 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.