Site Overlay

ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி – Goki’s Kitchen

செய்முறை வீடியோ: 

 

தேவையான பொருள்கள் :

  1. கடுகு – 1/4 ஸ்பூன்
  2. சீரகம் – 1/4 ஸ்பூன்
  3. பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
  4. வெந்தயம் – 25
  5. முந்திரி – 10
  6. தேங்காய் – அரை கப்
  7. சமையல் எண்ணெய்
  8. பெரிய வெங்காயம் – 2
  9. பச்சை மிளகாய் – 2
  10. கருவேப்பில்லை
  11. தக்காளி – 2
  12. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  13. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  14. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  15. கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்
  16. பெருங்காயத்தூள்
  17. புளித்தண்ணீர்
  18. மீன் – அரை கிலோ
செய்முறை:

Step – 1:

கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், முந்திரி சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.

 Step –  2 :

அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து தேங்காய் நிறம் மாறும் வரை வறுக்கவும்.

Step – 3:

வறுபட்டதும் ஆறவிட்டு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு எடுக்கவும்.

Step – 4:

சமையல் எண்ணெய் 6 ஸ்பூன் சேர்த்து பெரிய வெங்காயம் 2 சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வதங்கியது பச்சைமிளகாய் 2 சேர்த்து வதக்கவும்.

Step – 5:

கருவேப்பிலை சிறிது சேர்த்துப்பின் 15 வெந்தயம் சேர்த்து 2 தக்காளி சேர்த்து வதக்கவும்.

Step -6:

தக்காளி சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா,கொத்தமல்லி தூள், சேர்த்து வதக்கி சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும் .

Step – 7:

வதக்கி நன்கு ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

Step – 8:

சமையல் எண்ணெய் 6 ஸ்பூன் சேர்த்து தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

Step – 9:

கொதித்ததும் புளித்தண்ணீர் சேர்த்து தேங்காய் பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.

Step – 10:

கொதித்ததும் அரைகிலோ மீன் சேர்த்து 5 முதல் 6 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இரக்கவும் .

சுவையான மீன் குழம்பு ரெடி.