செய்முறை வீடியோ:
தேவையான பொருள்கள் :
- கடுகு – 1/4 ஸ்பூன்
- சீரகம் – 1/4 ஸ்பூன்
- பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்
- வெந்தயம் – 25
- முந்திரி – 10
- தேங்காய் – அரை கப்
- சமையல் எண்ணெய்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- கருவேப்பில்லை
- தக்காளி – 2
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – 2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள்
- புளித்தண்ணீர்
- மீன் – அரை கிலோ
செய்முறை:
Step – 1:
கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், முந்திரி சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
Step – 2 :
அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து தேங்காய் நிறம் மாறும் வரை வறுக்கவும்.
Step – 3:
வறுபட்டதும் ஆறவிட்டு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு எடுக்கவும்.
Step – 4:
சமையல் எண்ணெய் 6 ஸ்பூன் சேர்த்து பெரிய வெங்காயம் 2 சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வதங்கியது பச்சைமிளகாய் 2 சேர்த்து வதக்கவும்.
Step – 5:
கருவேப்பிலை சிறிது சேர்த்துப்பின் 15 வெந்தயம் சேர்த்து 2 தக்காளி சேர்த்து வதக்கவும்.
Step -6:
தக்காளி சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா,கொத்தமல்லி தூள், சேர்த்து வதக்கி சிறிது பெருங்காயம் தூள் சேர்க்கவும் .
Step – 7:
வதக்கி நன்கு ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
Step – 8:
சமையல் எண்ணெய் 6 ஸ்பூன் சேர்த்து தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
Step – 9:
கொதித்ததும் புளித்தண்ணீர் சேர்த்து தேங்காய் பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.
Step – 10:
கொதித்ததும் அரைகிலோ மீன் சேர்த்து 5 முதல் 6 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இரக்கவும் .
சுவையான மீன் குழம்பு ரெடி.