சுவையான ரோட்டுக்கடை பரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – தேவையான அளவு
- சிக்கன் (எலும்பு கறி) – 1/2 கிலோ
- பட்டை – 2
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 3
- மிளகு – 1 ஸ்பூன்
- சோம்பு – 3 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- கச கச – 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- பிரியாணி இலை – 2
- பெரிய வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 3
- மஞ்சள் – 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி பவுடர் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
Step – 1:
2 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து ஒரு பட்டை, 4 கிராம்பு, 3 ஏலக்காய், மிளகு 1 ஸ்பூன், சோம்பு 2 ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், கச காசா ஒரு ஸ்பூன், துருவிய தேங்காய் அரை கப், சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் .
Step – 2:
வதக்கியதும் மிக்சியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும் .
Step – 3:
குக்கரில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை 2 ,பட்டை 1, சோம்பு 1 ஸ்பூன்
சேர்த்து பெரியவெங்காயம் 2 சேர்த்து வதக்கவும் .2 தக்காளி , 3 பச்சை மிளகாய் சேர்த்து மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் ,1 ஸ்பூன் மிளகாய் தூள் ,1 ஸ்பூன் கொத்தமல்லி தூள் ,தேங்காய் மிக்ஸ் சேர்த்து கலந்துகொள்ளவும்.
Step – 4:
உப்பு தேவையான அளவு சேர்த்து அரை கிலோ சிக்கன் எலும்பு கறியாக எடுத்து கொள்ளவும்.அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ளவும் .
Step – 5:
2 கப் தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும். குக்கரை மூடி 6 விசில் விடவும் .
Step – 6:
சிக்கன் சால்னா ரெடி .
ரோட்டுக்கடை பரோட்டா சால்னா இப்படி தான் செய்யணும்…..