Site Overlay

சுவையான சர்க்கரை பொங்கல் – Goki’s Kitchen

இந்த நெய் மணக்கும் சர்க்கரை பொங்கலை ஒரு முறை செய்து பாருங்கள். 

செய்முறை:

 

தேவையான பொருட்கள் :

  1. பச்சரிசி – 1/2 கப் 
  2. நெய் – 125 ml
  3. கொதிக்க வைத்த பால் – 1/2 கப்
  4. முந்திரி – 10 to 15
  5. உலர்திராட்சை (கிஸ்மிஸ்) – 10 – 15
  6. வெல்லம் – 350 ml
  7. ஏலக்காய் பவுடர் – சிறிதளவு 
     

செய்முறை விளக்கம் :
Step – 1:
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அரை கப் பச்சரிசி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .


Step – 2:
வதக்கியதும் அரை கப் பால் (காய்ச்சி ஆரிய பால் சேர்க்கவும்) .
தண்ணீர் 1 கப் சேர்த்து 3 விசில் விடவும். 

3 விசில் விடவும். 

Step – 3:
ஒரு வாணலில் தேவையான அளவு நெய் சேர்த்து முந்திரி , திராக்சை சேர்த்து வருது தனியே வைக்கவும் .

     

Step – 4:
அதே வாணலில் ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து 350 gm மண்டைவெல்லம் சேர்த்து உருகி தண்ணீராக மாறியதும் அதை வடிகட்டி தனியே எடுத்து கொள்ளவும். 

Step – 5:
பிறகு குக்கரை திறந்து சத்தத்தை நன்கு மசித்து கொள்ளவும் .

Step – 6:
மண்டைவெல்ல தண்ணீரை 1-1/2 cup சாதத்தில் சேர்க்கவும் .தண்ணீர் வற்றியதும் ஏலக்காய் தூள் சேர்க்கவும் .

Step – 7:
பிறகு வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து கிளறிவிடவும் .கடைசியில் சிறிது நெய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்

நெய் மணக்கும் சர்க்கரை பொங்கல் ரெடி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *