பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள் :
சிக்கனை ஊறவைக்க:
1. சிக்கன் – 300 கிராம்
2. இஞ்சி & பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
3. தயிர் – 2 ஸ்பூன்
4. 1/2 பழம் – எலுமிச்சை சாறு
5. காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
6. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
7. உப்பு – தேவையான அளவு
மசாலா விழுது தயாரிக்க:
1. வெண்ணெய் – 3 ஸ்பூன்
2. சீரகம் – 1 ஸ்பூன்
3. இஞ்சி – 1 inch & பூண்டு -10 பல்
4. வெங்காயம் – 2
5. தக்காளி – 4
6. முந்திரி பருப்புகள் – 7
7. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
8. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
9. காஷ்மீரி மிளகாய் தூள் – 1 & 1/2 ஸ்பூன்
10. மல்லி தூள் – 1 ஸ்பூன்
11. உப்பு – தேவையான அளவு
Easy Butter Chicken recipe / Butter Chicken Recipe in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
சிக்கனை ஊறவைக்க:
Step – 1:
சிக்கன் – 300 கிராம், இஞ்சி & பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன், தயிர் – 2 ஸ்பூன், 1/2 பழம் – எலுமிச்சை சாறு ,
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
மசாலா விழுது தயாரிக்க:
Step – 1:
ஒரு வாணலியில் வெண்ணெய் – 3 ஸ்பூன்,சீரகம் – 1 ஸ்பூன்,இஞ்சி – 1 இன்ச், 10 பல் & பூண்டு
வெங்காயம் – 2, தக்காளி – 4, முந்திரி பருப்புகள் – 7, சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் மிதமான தீயில்.
Step – 2:
பின் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 1 & 1/2 ஸ்பூன்,
மல்லி தூள் – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு நன்கு கலந்து பின் அடுப்பை அணைக்கவும்.
Step – 3:
ஆறியதும் மிஸ்சிஜரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
Step – 4:
அதை வாணலியில் வெண்ணெய் – 3 ஸ்பூன் சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.
Step – 5:
10 நிமிடம் கழித்து மசாலா கெட்டியானதும் அடுப்பை அனைத்து தனியே வைக்கவும்.
Step – 6:
சிக்கன் பொறிக்க ஒரு வாணலியில் சிக்கன் பொறிக்க எண்ணெய் சேர்த்து சூடானது சிக்கன் பொரித்து எடுத்து கிரேவியில் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.
Step – 7:
10 நிமிடம் கழித்து நம்முடைய சுவையான பட்டர் சிக்கன் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/easy-butter-chicken-recipe-butter-chicken-recipe-gokis-kitchen/