Site Overlay

Little Millet Pongal | சாமை வெண் பொங்கல் | Samai Ven Pongal | Drumstick Sambar Recipe| Murungakkai Sambar | Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் சாம்பார்
செய்ய தேவையான பொருட்கள்:

1. மைசூர் பருப்பு – 1/2 கிளாஸ்
2. துவரம் பருப்பு – 1/2 கிளாஸ்
3. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
4. எண்ணெய் தேவையாள அளவு
5. கடுகு – 1/2 ஸ்பூன்
6. சீரகம் – 1/2 ஸ்பூன்
7. மல்லித்தழை சிறிதளவு
8. கருவேப்பிலை சிறிதளவு
9. பச்சைமிளகாய் – 3
10. சின்ன வெங்காயம் – 10
11. தக்காளி – 2 (மீடியம் சைஸ்)
12. முருங்கைக்காய் – 3
13. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
14. சாம்பார் பவுடர் – 3 ஸ்பூன்ஸ்
15. உப்பு தேவையாள அளவு
16. பெருங்காயம் சிறிதளவு

சாமை பொங்கல் செய்ய
தேவையான பொருட்கள்
:

1. பாசிப்பருப்பு – 1/2 கிளாஸ்
2. சாமை அரிசி – 1 கிளாஸ்
3. உப்பு தேவையான அளவு
4. நெய் – 6 ஸ்பூன்
5. மிளகு – 1/4 ஸ்பூன்
6. சீரகம் – 1/2 ஸ்பூன்
7. மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
8. கறிவேப்பிலை சிறிதளவு
9. பச்சைமிளகாய் – 1
10. பெருங்காயம் சிறிதளவு
11. இஞ்சி சிறிதளவு

Little Millet Pongal | சாமை வெண் பொங்கல் | Samai Ven Pongal | Drumstick Sambar Recipe| Murungakkai Sambar |செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு குக்கரில் மைசூர் பருப்பு – 1/2 கிளாஸ் ,துவரம் பருப்பு – 1/2 கிளாஸ் ,சேர்த்து நன்கு 3 முதல் 4 தடவை கழுவி கொள்ளவும்.  பின் 2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து , மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் ,எண்ணெய் -1 ஸ்பூன் சேர்த்து 1 விசிலுக்கு விடவும். (1 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் தானாக இறங்கும் வரை காத்திருக்கவும்) 

 

Step – 2:
ஒரு வாணலியில் எண்ணெய் – 5 ஸ்பூன் சேர்த்து கடுகு – 1/2 ஸ்பூன் ,சீரகம் – 1/2 ஸ்பூன் ,மல்லித்தழை சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு ,பச்சைமிளகாய் – 3 ,சின்ன வெங்காயம் – 10 ,தக்காளி – 2 (மீடியம் சைஸ்) 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

 

Step – 3:
பின் முருங்கைக்காய் – 3 சேர்த்து  3 நிமிடம் (Low flame) வதக்கவும்.

Step – 4:
பின் குக்கரை திறந்து வதக்கிய முருங்கைக்காய் சேர்த்து  மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் ,சாம்பார் பவுடர் – 3 ஸ்பூன்ஸ் ,உப்பு தேவையாள அளவு ,பெருங்காயம் சிறிதளவு மல்லித்தழை சிறிதளவு சேர்த்து  1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும். நம்முடைய சுவையான மணமான முருங்கைக்காய் சாம்பார் தயார்…

சாமை பொங்கல் செய்ய:

Step – 1:
ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு – 1/2 கிளாஸ் சாமை அரிசி – 1 கிளாஸ் சேர்த்து  நன்கு 4 முதல் 5  தடவை கழுவி கொள்ளவும்.  பின்  குக்கரில் 7 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து 5 விசிலுக்கு விடவும். (5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் தானாக இறங்கும் வரை காத்திருக்கவும்). 

   

Step – 2:
ஒரு வாணலியில் நெய் – 6 ஸ்பூன் ,மிளகு – 1/4 ஸ்பூன் ,சீரகம் – 1/2 ஸ்பூன் ,மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு, பச்சைமிளகாய் – 1 ,பெருங்காயம் சிறிதளவு ,இஞ்சி சிறிதளவு சேர்த்து  வதக்கவும். 

     

Step – 3:
குக்கரை திறந்து தாளித்ததை சேர்த்து கலந்து விடவும். நம்முடைய சுவையை சாமை வெண்பொங்கல் தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *