முட்டை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் – 2
2. தக்காளி – 3
3. எண்ணெய் – 8 ஸ்பூன்
4. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
5. உப்பு தேவையான அளவு
6. மிளகாய்த்தூள் – 1 & 1/2 ஸ்பூன்
7. வேகவைத்த முட்டை – 5
8. மிளகு தூள் – 1 ஸ்பூன்
9. சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
10. சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
11. கரம் மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
12. மல்லித்தூள் – 1 & 1/2 ஸ்பூன்
13. பச்சைமிளகாய் – 2
14. கருவேப்பில்லை சிறிதளவு
15. பூண்டு பல்- 10
Egg Gravy / Simple & Tasty Egg Gravy / Egg Curry Recipe in Tamil / செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் வெங்காயம் – 2 சேர்த்து நன்கு வறுபட்டதும் எடுத்து ஒரு மிஸ்சிஜரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும்.
Step – 2:
அதே வாணலியில் உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்துவிட்டு வேகவைத்த முட்டை – 5 சேர்த்து நன்கு வறுபட்டதும் எடுத்துதனியே வைக்கவும்.
Step – 3:
ஒரு மிஸ்சிஜரில் தக்காளி – 3, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகுத்தூள் – 1 ஸ்பூன், சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 & 1/2 ஸ்பூன், கரம் மசாலாத்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 & 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்து தனியே வைக்கவும்.
Step – 4:
அதே வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கருவேப்பில்லை சிறிதளவு, பூண்டு பல்- 10 நன்கு வறுபட்டதும்
Step – 5:
அரைத்த வெங்காயம் பேஸ்ட் சேர்த்து பச்சைவாசம் போகும்வரை மூடி போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
Step – 6:
பின் அரைத்த தக்காளி மசாலா பேஸ்ட் சேர்த்து பச்சைவாசம் போகும்வரை மூடி போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கவும்.
Step – 7:
5 நிமிடம் கழித்து 4 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். (low flame)
Step – 8:
5 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியானதும் வறுத்த முட்டை சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
நம்முடைய சுவையான மணமான முட்டை கிரேவி தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/egg-gravy-simple-tasty-egg-gravy-egg-curry-recipe-gokis-kitchen/