தேவையான பொருட்கள்:
1. இஞ்சி சிறிதளவு
2. பூண்டு – 20 பல்
3. நெய் – 2 ஸ்பூன்
4. எண்ணெய் – 2 ஸ்பூன்
5. சீரகம் – 1/2 ஸ்பூன்
6. சோம்பு – 1/2 ஸ்பூன்
7. கசகசா – 1/2 ஸ்பூன்
8. பச்சை மிளகாய் – 3
9. கறிவேப்பில்லை சிறிதளவு
10. வெங்காயம் மீடியம் சைஸ் – 2
11. தக்காளி – 8 மீடியம் சைஸ்
12. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
13. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
14. பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
15. பெருங்காயம் சிறிதளவு
16. உப்பு தேவையான அளவு
17. அரிசி – 1 கப்
18. தண்ணீர் – 2 கப்
19. மல்லித்தழை, புதினா சிறிதளவு
Thakkali Sadam in Tamil / How to make Tomato Rice in Tamil – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
முதலில் ஒரு மிக்சிஜரில் இஞ்சி சிறிதளவு பூண்டு – 20 பல் சேர்த்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெடி அதை தனியாக எடுத்து கொள்ளவும்.
Step – 2:
குக்கரில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய்,சேர்த்து 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் சோம்பு , 1/2 கசகசா,3 பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பில்லை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
Step – 3:
வெங்காயம் – 2 சேர்த்து , 2 நிமிடம் வதக்கவும். தக்காளி – 8 மீடியம் சைஸ்,மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்,பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்,பெருங்காயம் சிறிதளவு ,உப்பு தேவையான அளவு சேர்த்து
தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
Step – 4:
அரிசி 1 கப், தண்ணீர் – 2 கப் சேர்த்து மல்லித்தழை, புதினா சிறிதளவு சேர்த்து கொதித்ததும் குக்கரை மூடி 2 விசில் விடவும். 10 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும் நம்முடைய சுவையான எளிமையான தக்காளி சாதம் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.