கோவில் பிரசாதம் புளியோதரை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
1 . நல்லெண்ணெய் தேவையான அளவு
2 . கடலை பருப்பு – 1 ஸ்பூன்
3 . உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
4 . கடலை – 2 ஸ்பூன்
5 . கடுகு – 1 ஸ்பூன்
6 . இஞ்சி சிறிது
7 . மிளகாய் வத்தல் 10
8 . பச்சை மிளகாய் – 2
9 . புளி சிறிய எலுமிச்சை அளவு
10 .பெருங்காய தூள்
11 . மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
12 . உப்பு தேவையான அளவு
13 . அரிசி 1 கப்
Recipe Card for Temple Style Tamarind Recipe:
Prep Time: 10 minutes
Cook Time: 20 minutes
Total Time: 30 minutes
Servings: 3
Course: Rice
செய்முறை விளக்கம்:
Step:1
குக்கரில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவும். கடலை பருப்பு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலை – 2 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
Step:2
இஞ்சி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் காய்த்த மிளகாய் – 10, பச்சை மிளகாய் – 2 சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
Step:3
சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து அரை கப் அளவு புளி தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கரைத்துவைத்த புளித்தண்ணீரை சேர்க்கவும்.
Step:4
பெருங்காயத்தூள் சிறிது சேர்க்கவும். 1- 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
Step:5
பிறகு மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் சேர்க்கவும்.உப்பு தேவையான அளவு சேர்த்து கொதித்ததும் ஒரு கப் அரிசியை சேர்க்கவும்.
Step:6
அரிசி சேர்த்து கொதிவந்ததும் குக்கரை மூடி 2 விசில் விடவும்.20 நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும் நம்முடைய கோவில் பிரசாதம் ரெடி
கோவில் பிரசாதம் ரெடி…..