Site Overlay

கார சட்னி செய்வது எப்படி- Goki’s Kitchen

கார சட்னி செய்வது எப்படி
என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1 . எண்ணெய் தேவையான அளவு
2 . பூட்டு – 10 பல்
3 . கடலை பருப்பு – 3 ஸ்பூன்
4 . மிளகாய் வத்தல் – 18
5 . சின்ன வெங்காயம் – 15
6 . தக்காளி – 8
7 . பெருங்காயத்தூள் சிறிது
8 . புளி சிறிது

செய்முறை விளக்கம்:

Step – 1:
கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பூண்டு 10 பல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

Step – 2:
கடலை பருப்பு 3 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

Step – 3:
மிளகாய் வத்தல் 18 சேர்த்து அதையும் 2 நிமிடம் வதக்கவும்.

Step – 4:
சின்ன வெங்காயம் 15 சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

Step – 5:
தக்காளி – 8 (சின்ன சைஸ்) சேர்த்து பெருங்காயத்தூள் சிறிது சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

Step – 6:
வதக்கி நன்கு ஆறியதும் சிறிதளவு புளி சேர்த்து மிஸ்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

Step – 7:
தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு சிறிது உளுந்து சிறுது சேர்த்து மிஸ்சியில் அரைத்த சட்னி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

சூப்பரான கார சட்னி ரெடி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *