செய்ய தேவையான பொருட்கள்:
1. சூடான தண்ணீர் தேவையான அளவு
2. உப்பு தேவையான அளவு
3. சோயா – 1 கப்
4. தயிர் – 1 ஸ்பூன்
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
6. காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 & 1/2 ஸ்பூன்
7. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
8. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
9. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
10. கடலை மாவு – 2 ஸ்பூன்
11. அரிசி மாவு – 1 ஸ்பூன்
12. சோளமாவு – 1 ஸ்பூன்
13. எண்ணெய் தேவையான அளவு
Soya 65 Recipe in Tamil / Meal Maker 65 Fry in Tamil / Goki’s Kitchen – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் வைத்துக் கொள்ளவும். அதில் உப்பு தேவையான அளவு, சோயா 1 கப் சேர்த்து 20 நிமிடம் அதை விடவும்.(ஊறட்டும்).
Step – 2:
20 நிமிடம் கழித்து அதை வடிகட்டி பின் சோயாவை கையால் பிழிந்து தனியா ஒரு பாத்திரத்தில் போடவும்.
Step – 3:
பின் தயிர் – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 & 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன், சோளமாவு – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
Step – 4:
சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
Step – 5:
ஒரு வாணலியில் சோயா பொரிக்க தேவையான அளவு, எண்ணெய் சேர்த்து சூடானதும் சோயாவை ஒவ்வொன்றாக போட்டு நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.
Step – 6:
சுவையான மொறு மொறுன்னு சோயா தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English:https://english.gokiskitchen.com/soya-65-recipe-soya-fry-gokis-kitchen/