Site Overlay

Paneer Rice in Tamil – Paneer Biryani in Tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:

1. நெய் – தேவையான அளவு
2. பன்னீர் – 200 கிராம் 
3. வெங்காயம் – 2
3. பிரியாணி இலை – 2
4. பட்டை
5. கருப்பு ஏலக்காய் – 1
6. கிராம்பு – 3
7. பச்சை ஏலக்காய் – 2
8. சீரகம் – 1/2 ஸ்பூன்
9. மிளகு – 1/4 ஸ்பூன்
10. சோம்பு – 1/2 ஸ்பூன்
11. தக்காளி – 2
12. பச்சைமிளகாய் – 1
13. புதினா, மல்லித்தழை சிறிதளவு
14. தயிர் – 1/2 கப்
15. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
16. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
17. கோஹினூர் பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்
18. இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
19. கோஹினூர் பாசுமதி அரிசி – 2 &1/2 டம்ளர்
20. உப்பு தேவையான அளவு

 Paneer Rice in Tamil – Paneer Biryani in Tamil – Goki’s Kitchen – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு வாணலியில் நெய் – 4 ஸ்பூன் சேர்த்து பன்னீர் 200 சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் சேர்த்து நன்கு மொன்னிறமாக வறுபட்டதும் தனியே எடுத்து வைக்கவும்.

 

Step – 2:
அதே நெய்யில் வெங்காயம் – 2, பிரியாணி இலை – 2, பட்டை, கருப்பு ஏலக்காய் – 1, கிராம்பு – 3, பச்சை ஏலக்காய் – 2, சீரகம் – 1/2 ஸ்பூன். மிளகு – 1/4 ஸ்பூன் , சோம்பு – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு வெங்காயம் மொண்ணிறம் ஆகும் வரை வதக்கவும்.

Step – 3:
பின் தக்காளி – 2, பச்சைமிளகாய் – 1, புதினா, மல்லித்தழை சிறிதளவு தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.

   

Step – 4:
பின் தயிர் – 1/2 கப்,மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், கோஹினூர் பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்

சேர்த்து மசாலா நன்கு கெட்டியாகும் வரை வதக்கவும்.

 

Step – 5:
பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் சேர்த்து பச்சைவாசம் போகும் வரை வதக்கவும்.

Step – 6:
பின் குக்கரில் நெய் 3 ஸ்பூன் சேர்த்து வதக்கிய மசாலாவை அதில் சேர்த்து கலந்துவிடவும்.

Step – 7:
கோஹினூர் பாசுமதி அரிசி – 2 &1/2 டம்ளர் சேர்த்து (அரிசி 40 நிமிடம் ஊறவைத்து)  3 & 3/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து புதினா, மல்லித்தழை சிறிதளவு சேர்த்து வறுத்த பன்னீர் சேர்த்து
நெய் 1 ஸ்பூன் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுக்கவும்.

   

நம்முடைய சுவையான மணமான பன்னீர் பிரியாணி தயார்…  

     

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *