Site Overlay

காளான் ஃப்ரைட் ரைஸ் | Mushroom Fried Rice Recipe in Tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 

1. எண்ணெய் – 4 ஸ்பூன்
2. கறிவேப்பிலை சிறிதளவு
3. பச்சை மிளகாய் -2
4. பூண்டு – 10 பல்
5. கேரட் – 1 கப்
6. பீன்ஸ் – 1 கப்
7. பச்சை பட்டாணி – 1 கப்
8. காளான் – 200 கிராம்
9. உப்பு தேவையான அளவு
10. சாதம் – 2 டம்ளர்
11. சீரகம் – 1/2 ஸ்பூன்

காளான் ஃப்ரைட் ரைஸ் | Mushroom Fried Rice Recipe in Tamil – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு பெரிய பாத்திரத்தில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன் சேர்த்து சிறிதளவு கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய், பூண்டு 10 பல் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வதக்கவும்.

 

Step – 2:
பின் 1 கப் கேரட்,1 கப் பீன்ஸ்,1 கப் பச்சை பட்டாணி,சேர்த்து 10 நிமிடம் (High flame) வதக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. 10 நிமிடத்தில் காய் வெந்து விடும்.

Step – 3:
காய் வெந்ததும் 200 கிராம் காளான் சேர்த்து 5 நிமிடம்(High flame) வதக்கவும். (காளானில் உள்ள தண்ணீர் வெளிய வரும் வரை).பின் வேகவைத்த சாதம் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.நம்முடைய சுவையான சுலபமான காளான் ஃப்ரைட் ரைஸ் தயார். 

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *