Site Overlay

காளான் பிரியாணி | Mushroom Biryani Recipe in Tamil | How to make Mushroom Biryani in Tamil – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்: 
  1. நெய் – 2 ஸ்பூன்
  2. .எண்ணெய் – 2 ஸ்பூன்
  3. பிரியாணி இலை – 3
  4. அன்னாசி பூ- 1
  5. பட்டை – 1
  6. ஏலக்காய் – 3
  7. கிராம்பு – 5
  8. வெங்காயம் – 2
  9. தக்காளி – 2
  10. காளான் – 200 கிராம்
  11. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  12. மல்லி தூள் – 1 ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. கொத்தமல்லி & புதினா இலை – சிறிதளவு
  15. பாஸ்மதி அரிசி – 2 டம்ளர்
  16. தண்ணீர் – 4 டம்ளர்
  17. இஞ்சி சிறிதளவு
  18. பூண்டு – 10 
  19. பச்சை மிளகாய் – 2
  20. சிவப்பு மிளகாய் – 5
  21. தேங்காய் – சிறிதளவு

காளான் பிரியாணி | Mushroom Biryani Recipe in Tamil | How to make Mushroom Biryani in Tamil எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:

செய்முறை விளக்கம்:

Step – 1:
ஒரு மிக்ஸி ஜாரில்
தேங்காய்  சிறிதளவு,கொத்தமல்லி & புதினா இலை – சிறிதளவு இஞ்சி சிறிதளவு,பூண்டு – 10 ,பச்சை மிளகாய் – 2,சிவப்பு மிளகாய் – 5 சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பின்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மல்லி தூள் – 1 ஸ்பூன் சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும். மசாலா பேஸ்ட் தயார்.

Step – 2:
குக்கரில்
நெய் – 2 ஸ்பூன்,எண்ணெய் – 2 ஸ்பூன்,பிரியாணி இலை – 3 ,அன்னாசி பூ- 1 ,பட்டை – 1 , ஜாவிதிரி – 1 ஏலக்காய் – 3 கிராம்பு – 5 வெங்காயம் – 2 சேர்த்து வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

Step – 3:
பின்
தக்காளி – 2 சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின் அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா பேஸ்ட் கெட்டியானதும் 

Step – 4:
காளான் 200 கிராம் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிதளவு மல்லித்தழை ,புதினா சேர்த்து வதக்கி விடவும். 5 நிமிடம் வதக்கவும். காளானில் உள்ள தண்ணீர் வெளியே வந்ததும் அரிசி சேர்க்கவும். 30 நிமிடம் ஊற வைத்த சீரக சம்பா அரிசி 2 டம்ளர் தண்ணீர் 4 டம்ளர் சேர்த்து கலந்து குக்கரை மூடி 1 விசில் விடவும்(High Flame)
பிரஷர் இறங்கியதும் குக்கரை திறக்கவும்.நம்முடைய சுவையான மணமான காளான் பிரியாணி தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *