Site Overlay

Jeera Rice with Potato Gravy – சீரக சாதம் உருளைக்கிழங்கு கிரேவி – Goki’s Kitchen

தேவையான பொருட்கள்:
ஜீரா சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

1. வேகவைத்த சாதம் 
2. எண்ணெய் - தேவையான அளவு 
3. நெய் - 5 ஸ்பூன் 
4. கறிவேப்பிலை சிறிதளவு 
5. மல்லித்தழை சிறிதளவு 
6. பச்சைமிளகாய் - 1
7. பிரியாணி இலை - 1
8. பட்டை - 1
9. கிராம்பு - 3
10. ஏலக்காய் - 2
11. முந்திரி சிறிதளவு 
12. சீரகம் - 1 ஸ்பூன் 
13. உப்பு தேவையான அளவு

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

1.உருளைக்கிழங்கு - தேவையான அளவு 
2. எண்ணெய் - தேவையான அளவு
3. சின்ன வெங்காயம் - 8
4. பூண்டு - 10
5. மல்லித்தழை சிறிதளவு 
6. தக்காளி - 2
7. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
8. மல்லித்தூள் - 1 ஸ்பூன் 
9. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
10. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 
11. காஸ்மீர் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
12.பெருங்காயம் சிறிதளவு 
13. உப்பு தேவையான அளவு 
14.சீரகம் - 1/2 ஸ்பூன் 
15. கறிவேப்பிலை - சிறிதளவு 
16. பச்சைமிளகாய் - 1

Jeera Rice with Potato Gravy – சீரக சாதம் உருளைக்கிழங்கு கிரேவி – செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

செய்முறை விளக்கம்:

Step – 1:
முதலில் சாதம் செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் சாப்பாடு அரிசி (30 நிமிடம் ஊறவைத்து) சேர்த்து 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சாதம் வெந்ததும் வடித்து ஒரு தட்டில் சேர்த்து ஆறவிடவும்.

Step – 2:
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு வேகவைக்கவும். 80% வெந்ததும்அதை வடிகட்டி தனியே வைக்கவும்.

     

Step – 3:
ஒரு வாணலியில் எண்ணெய் – 4 ஸ்பூன் சேர்த்து சின்ன வெங்காயம் – 8, பூண்டு – 10 சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் தக்காளி – 2 சேர்த்து கொஞ்சம் மல்லித்தழை சேர்த்து தக்காளி மாசியும் வரை வதக்கவும்.

     

Step – 4:
தக்காளி வதங்கியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன்,

மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், பெருங்காயம் சிறிதளவு உப்பு தேவையான அளவு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் பின் அடுப்பை அணைத்து விடவும்.

Step – 5:
நன்கு ஆறியதும் மிஸ்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

 

Step – 6:
அதே வாணலியில் எண்ணெய் -3 ஸ்பூன் சேர்த்து சீரகம் – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சைமிளகாய் – 1 சேர்த்து அரைத்த மசாலா பேஸ்ட் சேர்த்து நன்குகலந்து விடவும்.

Step – 7:
வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்துவிடவும் பின் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு மூடி போட்டு மூடவும் கிரேவி கெட்டியானது அடுப்பை அணைக்கவும். நம்முடைய சுவையான மணமான உருளைக்கிழங்கு கிரேவி தயார்…

Step – 8:
ஜீரா சாதம் செய்ய ஒரு வாணலியில் 5 ஸ்பூன் நெய் சேர்த்து ஜீரா சாதம் செய்ய ஒரு வாணலியில் 5 ஸ்பூன் நெய் சேர்த்து பிரியாணி இலை – 1, பட்டை – 1, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, முந்திரி சிறிதளவு, சீரகம் – 1 ஸ்பூன் 6. பச்சைமிளகாய் – 1 சேர்த்து 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்கவும்

   

Step – 9:
வேகவைத்த சாதம் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மெதுவாக கலந்து விடவும் கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து அடுப்பை அணைக்கவும் நம்முடைய சுவையை ஜீரா சாதம் தயார்…

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *