செய்ய தேவையான பொருட்கள்:
1. குண்டூர் சிவப்பு மிளகாய் – 5
2. கொத்தமல்லி – 1 ஸ்பூன்
3. சீரகம் – 1 ஸ்பூன்
4. மிளகு – 1 ஸ்பூன்
5. சோம்பு – 1/2 ஸ்பூன்
6. வெந்தயம் சிறிதளவு
7. கிராம்பு – 3
8. காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
9. இஞ்சி – 2 இன்ச்
10. பூண்டு – 7
11. நெய் – 2 ஸ்பூன்
12. பன்னீர் – 200கிராம்
13. வெங்காயம் – 1
14. தயிர் – 3 ஸ்பூன்
15. உப்பு தேவையான அளவு
16. கறிவேப்பில்லை சிறிதளவு
குண்டூர் பன்னீர் நெய் வறுவல் | Guntur ghee roast செய்முறை:
குண்டூர் பன்னீர் நெய் வறுவல் | Guntur ghee roast in Tamil / Goki’s Kitchen செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு வாணலியில் குண்டூர் மிளகாய் 5 சேர்த்து மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வருது மிக்சியில் மாற்றவும் .
Step – 2:
கொத்தமல்லி – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், வெந்தயம் சிறிதளவு
கிராம்பு – 3 சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வருது மிக்ஸியில் மாற்றவும்.
Step – 3:
காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன், இஞ்சி – 2 இன்ச் , பூண்டு – 7 சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
Step – 4:
வாணலியில் நெய் ஸ்பூன் 2 ஸ்பூன் சேர்த்து வெட்டிவைத்த பன்னீர் சேர்த்து நன்கு பொன்னிறமா பொறித்து தனியே வைக்கவும்.
Step – 5:
வெங்காயம் சேர்த்து கொஞ்சம் வெந்ததும் மிக்ஸியில் இருக்கும் மசாலாவை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
Step – 6:
தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயிர் நன்கு மசாலாவில் சேரும் வரை கலந்துகொள்ளவும்.
Step – 7:
பின் பன்னீர் சேர்த்து நன்கு மசாலாவில் இருக்கும் நெய் தனியே வரும் வரை மீதமான தீயில் வைத்து சமைக்கவும்.
Step – 8:
கடைசியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
நம்முடைய சுவையான குண்டூர் பன்னீர் நெய் மசாலா வறுவல் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Read it in English: https://english.gokiskitchen.com/guntur-ghee-roast-paneer-ghee-roast-recipetamil-gokis-kitchen/
1 thought on “குண்டூர் பன்னீர் நெய் வறுவல் | Guntur ghee roast in Tamil / Goki’s Kitchen”