தேவையான பொருட்கள்:
1 . காலிபிளவர் – 1 முழு பூ
2 . உப்பு தேவையான அளவு
3 . மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
4 . காஸ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
5 . மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
6 . அரிசி மாவு – 2 ஸ்பூன்
7 . எண்ணெய் தேவையான அளவு
8 . சாதம் – டம்ளர்
9 . கறிவேப்பிலை சிறிதளவு
10 . பச்சை மிளகாய் – 2
11 . சீரகம் – 1/2 ஸ்பூன்
12 .மிளகு – 10
13 . மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
14 . பூண்டு – 10
Gobi Fried Rice without sauce -காலிஃபிளவர் ஃபிரைட் ரைஸ் – எப்படி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்:
செய்முறை விளக்கம்:
Step – 1:
ஒரு பாத்திரத்தில் ஒரு முழு காலிபிளவர் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி கொண்டு காலிபிளவர் பொறிக்க தேவையான அளவு உப்பு சேர்த்து பின் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் சேர்த்து, காஸ்மீர் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து, அரிசி மாவு – 2 ஸ்பூன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.கலந்து காலிபிளவரை நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
Step – 2:
பின் ஒரு பெரிய கடாயில் காலிபிளவர் எண்ணெய் 3 ஸ்பூன் சேர்த்து சிறிதளவு கறிவேப்பிலை 3 பச்சை மிளகாய் சேர்த்து பின் 10 பல் பூண்டு சேர்த்து சீரகம் 1/2 டீஸ்பூன் மிளகு 10, மிளகுத்தூள் தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
Step – 3:
பின் வேகவைத்த சாதம் சேர்த்து பொரித்த காலிபிளவர் சேர்த்து கலந்து விடவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும். நம்முடைய காலிபிளவர் ஃபிரைட் ரைஸ் தயார்…
இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இந்த போஸ்டில் உள்ள விடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.