Site Overlay

சுவையான ஃப்ரூட் கஸ்டர்டு – Goki’s Kitchen

சுவையான ஃப்ரூட் கஸ்டர்டு
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1 . பால் – 1 லிட்டர்
2 . சக்கரை – 10 ஸ்பூன் (உங்கள் சுவைக்குஏற்ப)
3 . காய்ச்சி ஆறிய பால் – 5 ஸ்பூன்
4 . Custard பவுடர் – 3 ஸ்பூன்
5 . ஏலக்காய் தூள் சிறிது

செய்முறை விளக்கம்:

)

Recipe card for Fruit custard recipe:

Prep Time: 2 hours
Cook Time: 20 minutes
Total Time : 2 hours 20 minutes
Servings : 6 members
Course : Dessert
Step – 1:
கடாயில் 1 லிட்டர் பால் சேர்த்து 10 ஸ்பூன் சக்கரை சேர்த்து கொள்ளவும் ( சக்கரை உங்கள் இனிப்புக்கு ஏற்ப ).

Step – 2:
சக்கரை சேர்த்த பின் 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும் .

Step – 3:
ஒரு பௌலில் 5 ஸ்பூன் காய்ச்சி ஆறவைத்த பால். கஸ்டர்டு பவுடர் – 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும் (கஸ்டர்டு பவுடர் அதிகம் சேர்த்தால் பால் இன்னும் அதிகமா கெட்டிப்படும் ஆனால் சுவையாக இருக்கும்).

Step – 4:
கட்டி இல்லாமல் கலந்து கொதிக்கும் பாலில் கலந்து கொள்ளவும் .

Step – 5:
கஸ்டர்டு பவுடர் கலந்ததும் கொஞ்சம் நேரம் அதை நன்கு கொதிக்க விடவும்.பின் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும்.

Step – 6:
ஏலக்காய் தூள் சேர்த்ததும் 5 நிமிடம் கொதிக்கவிடவும் .கெட்டியானதும் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும் .

Step – 7:
நன்கு ஆறியதும் பழங்கள் சேர்த்து (ஆப்பிள், மாதுளை,வாழைப்பழம்) உங்கள் விருப்பத்திற்கு சேர்க்கவும்.

Step – 8:
இதை 3 மணி நேரம் fridgeல் வைத்து பின் சாப்பிடவும்.

ஜில்லுனு fruit custard ரெடி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *