Site Overlay

ஏலக்காய் டீ உடன் வாழைக்காய் பஜ்ஜி – Goki’s Kitchen

ஏலக்காய் டீ உடன் வாழைக்காய் பஜ்ஜி இப்படி செஞ்சு பாருங்க
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள் :

1 . பௌலில் – 1 கப் கடலை மாவு
2 . அரிசி மாவு – 3 ஸ்பூன்
3 . மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
4 . உப்பு – தேவையான அளவு
5 . பெருங்காயம் – சிறிது
6 . தண்ணீர் தேவையான அளவு
7 . எண்ணெய் – பஜ்ஜி செய்ய தேவையான அளவு
8 . வாழைக்காய் – 1

ஏலக்காய் டீ செய்ய தேவையான பொருள்கள்:

1 . பால் – 1/2 லிட்டர்
2 . சக்கரை தேவையான அளவு
3 . டீ தூள் தேவையான அளவு
4 . ஏலக்காய் – 1 ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

:

Step – 1:
ஒரு பௌலில் 1 கப் கடலை மாவு ,அரிசி மாவு – 3 ஸ்பூன் , மிளகாய் தூள் – 2 ஸ்பூன் , உப்பு தேவையான அளவு, பெருங்காயம் சிறிது சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.

Step – 2:
கடாயில் பஜ்ஜி செய்ய தேவையான அளவு எண்ணெய் சேர்த்து 1 வாழைக்காயை இரண்டாக வெட்டி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து பஜ்ஜி மாவில் தடவு சூடான எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

Step – 3:
சுட சுட வாழைக்காய் பஜ்ஜி ரெடி

Step – 4:
1/2 லிட்டர் பாலை 3 நிமிடம் காய்ச்சி டீ தூள் தேவையான அளவு சேர்த்து சக்கரை தேவையான அளவு சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டவும் .

Step – 5:
ஏலக்காய் டீ ரெடி .

சுட சுட வாழைக்காய் பஜ்ஜியும் ஏலக்காய் டீயும் ரெடி….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *