Site Overlay

தயிர்சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க – Goki’s Kitchen

தயிர்சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க
இதை செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1 . சாதம் – 2 கப்
2 . கெட்டியான தயிர் – 1/2 கப்
3 . காய்ச்சி ஆறவைத்த பால் – 1 கப்
4 . உப்பு தேவையான அளவு
5 . எண்ணெய் தேவையான அளவு
6 . முந்திரி தேவைக்கு
7 . கடுகு – 1 ஸ்பூன்
8 . பச்சைமிளகாய் – 2
9 . கறிவேப்பிலை சிறிது
10 . கொத்தமல்லி சிறிது
11 . மாதுளம்பழம் தேவைக்கு

செய்முறை விளக்கம்:

Step – 1:
கடாயில் 2 கப் சாதம் சேர்த்து தயிர் – 1/2 கப் சேர்த்து பால் – 1 கப் சேர்த்து உப்பு தேவையானஅளவு சேர்த்து சமைக்க ஆரம்பிக்கவும் .

Step – 2:
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொஞ்சம் முந்திரி சேர்த்து வருது தனியே வைத்துக்கொள்ளவும்

Step – 3:

அதே எண்ணெயில் 1- ஸ்பூன் கடுகு பச்சைமிளகாய் – 2 கறிவேப்பிலை சிறிது சேர்த்து தாளிக்கவும்.

Step – 4:
தாளித்ததை சாதத்தில் சேர்த்து கிளறவும். சாதத்தில் ஊட்டிய தயிர் பால் கெட்டியாகும் வரை கிளறவும்

Step – 5:
பிறகு வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.

Step – 6:
கடைசியாக சிறிது கொத்தமல்லி சேர்த்து கிளறவும் மாதுளம்பழம் சேர்த்து பரிமாறவும்.

Step – 7:
குழந்தைகள் விரும்பும் மிகவும் சுவையான தயிர்சாதம் ரெடி…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *